“காதலனுடன் பேச முடியாத விரக்தி”.. பிறந்தநாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்…


காதலனுடன் பேச முடியாத விரக்தியில் இளம்பெண் ஒருவர் தனது பிறந்தநாளிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர்ராம் நகரைச் சேர்ந்தவர் சோமுராஜ். காய்கறி வியாபாரியான இவருக்கு சுவாதி என்ற மகள் உள்ளார். சோமுராஜ் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் சின்னபிள்ளை வீட்டில் சுமதியை தங்க வைத்திருந்தார். அங்கு இருந்தபோது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

Also Read  பாலியல் துன்புறுத்தல் புகார்: பதவி விலகிய கே.டி. ராகவன்..! நடந்தது என்ன?

இந்த காதல் விவகாரம் சோமுராஜூக்கு தெரியவரவே அவர் தனது மகளை கடந்த செப்டம்பர் மாதம் கோவைக்கு அழைத்து வந்தார். சுவாதியிடம் செல்போன் இல்லாததால் தனது காதலனை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த மன வேதனையில் இருந்து உள்ளார்.  சுவாதிக்கு பிறந்தநாள் என்பதால் அவரது பெற்றோர் புத்தாடைகள் எடுத்து வைத்து இருந்தனர். குளித்து விட்டு அந்த துணியை அணிந்து கொண்டு வந்தவுடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.

அதன்படி இன்று காலை சுவாதி குளிப்பதற்காக அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக்கு சென்று கதவை தட்டினர். இதையடுத்து அறையின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் சுவாதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.  இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுவாதி தூக்கில் தொங்கிய அறையில் கடிதம் ஒன்று

Also Read  சமையல் வேலைக்கு வந்த பெண்ணிடம் உரிமையாளர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

அந்த கடிதத்தில், அம்மா, அப்பா நீங்கள் என்னை நன்றாக தான் வளர்த்தீர்கள். ஆனால் நான் தான் உங்களது பேச்சை கேட்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் நான் உங்கள் மகளாக பிறந்து உங்களது சொல் பேச்சை கேட்டு நடப்பேன் என எழுதியிருந்தார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய்… தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

Lekha Shree

திருமணத்துக்கு மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீச்சு!!! 2 குழந்தைகளின் தாய் கைது…

Lekha Shree

கையில் குழந்தை… சூட்கேசில் மனைவியின் பிணம்… கணவரின் கொடூர கொலை!

Lekha Shree

மூன்றரை லட்சம் பில் கட்டாமல் ஏமாற்றிய தொழிலதிபர்!!! பெங்களூரு ரிசார்ட்டில் மோசடி….

Lekha Shree

துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ் ஐ கைது!

Lekha Shree

சைதாபாத் பாலியல் வன்கொடுமை விவகாரம் – சந்தேகப்பட்ட நபர் தற்கொலை? ஹைதரபாத்தில் பரபரப்பு..!

Lekha Shree

பாலியல் புகார் – மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது!

Lekha Shree

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்..!

Lekha Shree

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Lekha Shree

கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?

Lekha Shree

நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை…! வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு..!

Lekha Shree

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு…!

Lekha Shree