மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தந்தை அடித்த சம்பவம்!!! குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு…


ராஜஸ்தான் மாநிலத்தில் 8 வயது சிறுவனை அவனது தந்தை வீட்டில் தலைகீழாக தொங்கவிட்டு அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தாபி பகுதியைச் சேர்ந்த ஒருவர் பள்ளியில் கொடுத்த வீட்டு பாடங்களை செய்யாத 8 வயது மகனை இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் சிறுவனின் கை மற்றும் கால்களை கட்டி வீட்டில் உள்ள சீலிங் பேனில் தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். அதன்பின் குச்சியை கொண்டு சிறுவனை தாக்குகிறார்.

அப்போது சிறுவனின் தாய் குறுக்கிட்டு அடிக்க வேண்டாம் எனக் கூறுகிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நவம்பர் 17-ம் தேதி நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்தப்பெண் தனது சகோதரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இந்த வீடியோவை தனது சகோதரனிடம் காண்பித்து அவர் செய்யும் கொடுமைகளை கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சிறுவனின் மாமா, சிறுவனின் தந்தை எப்போதும் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டிருப்பார் என்றும் அவரது 5 வயது மகளையும் இப்படித்தான் கொடுமை படுத்துவார் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை.

சிறுவனின் தந்தையின் முரட்டு சுபாவம் காரணமாக புகார் அளிக்க அவரது குடும்பத்தினர் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இந்த விவகாரத்தில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து மூன்று நாள்களுக்கு அறிக்கை சமர்பிக்க மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read  ஆபாச படம் எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது..! பாலிவுட்டில் பரபரப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிறுநீரை தண்ணீரில் கலந்து பானிபூரி விற்ற நபர்… வெளியான வீடியோவால் அதிர்ச்சி..!

mani maran

பாலியல் புகாரில் பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி….

VIGNESH PERUMAL

“சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள கடிதம் தற்கொலை தொடர்பானது அல்ல!” – கோவை மாணவியின் தந்தை..!

Lekha Shree

மனநலம் பாதித்த பெண்ணை குழந்தை திருட வந்தவர் என தாக்கிய பொதுமக்கள்..!

Lekha Shree

போலீஸுக்கே சிறையா…! சினிமா பாணியில் காவல்துறை அதிகாரி கைது…

VIGNESH PERUMAL

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு – தி.மு.க. எம்.பி. ரமேஷை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்?

Lekha Shree

எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த சோகம்!!! ஓடும் காரில் பாலியல் பலாத்காரம்….

Lekha Shree

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பி. ரமேஷூக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல்..!

Lekha Shree

யூடியூபர் மதனின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

ஆபாச வீடியோ முதல் சிவசங்கர் பாபா வரை.. : வசமாக சிக்குகிறாரா கே.டி.ராகவன்.!

mani maran

ரூ.33 லட்சம் 213 சவரன் நகையுடன் சிறுவன் மாயம்!!! பெற்றோர் திட்டியதால் நேபாளம் தப்ப முயற்சி…..

Lekha Shree

கள்ளகாதலை கைவிட வலியுறுத்தி அக்காள் தங்கை செய்த ஆவேச செயல்…

VIGNESH PERUMAL