மத்திய அமைச்சரவையில் பதவி விலகிய மூத்த அமைச்சர்கள்…! காரணம் இதுதான்…!


மத்திய அமைச்சரவையை மாற்றம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு வருவதாக கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டது.

ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால் போன்றோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால், எதிர்பாராத விதமாக 12 சீனியர் அமைச்சர்கள் ராஜினாமா செய்தது உள்ளனர்.

சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், செய்தி – ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் ராஜினாமா செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

மூத்த அமைச்சர்கள் பதவி விலக காரணம், அவரவர் துறைகளின் நிர்வாக தோல்வியை எனக் கூறப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையை சரியாக எதிர்கொள்ளவில்லை என ஹர்ஷ்வர்தனுக்கு எதிராக கூறப்படுகிறது.

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் தொடர்பாக, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்துடன் மோதல், ரவி சங்கர் பிரசாத் வெளியேற்றத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.

கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார். அதனால், உடல்நிலை காரணமாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக, அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து மோடி ஆய்வு செய்தார். அதில், இந்த குறிப்பிட்ட அமைச்சர்களின் செயல்பாட்டில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அதிரடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சரவையில் இருந்தபோது, மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள இந்த, 12 பேருக்கும் கட்சிப் பணி அல்லது மாநில சட்டசபை தேர்தல் பணிகள் கொடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Also Read  இந்தியாவை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பசுக்கள் எங்கள் தாய்” – அசாம் முதல்வர்

Shanmugapriya

கொரோனா தடுப்பு கவசத்தை அணிந்து ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடிய நபர்! – வீடியோ

Tamil Mint

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் வாதங்களில் நியாயமில்லை: பிரதமர்

Tamil Mint

“ஊதியத்துடன் ஒருவாரம் விடுமுறை” – ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய நிறுவனம் எது தெரியுமா?

Shanmugapriya

மருமகளை மறுமணம் செய்த மாமனார்… அதிர்ச்சியில் உறைந்த மகன்..!

Lekha Shree

டெல்லி கலவரத்தில் எங்களை தாக்கியது அடியாட்கள் தான்… விவசாயிகள் இல்லை… போலீசார் அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

ஆபாச படம் எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது..! பாலிவுட்டில் பரபரப்பு..!

Lekha Shree

திருமணத்தன்று மணமகள் உயிரிழப்பு! உடனேயே மணமகளின் தங்கையை திருமணம் செய்துகொண்ட மணமகன்!

Shanmugapriya

பள்ளிக்கூடத்தை கூட தாண்டாமல் பலே பதவிகளை ஸ்வப்னா பெற்றது எப்படி? பகீர் தகவல்கள்

Tamil Mint

பாலியல் வன்கொடுமை வழக்கில் ராக்கி கட்டினால் ஜாமீன்… விநோத வழக்கில் கடுப்பான உச்சநீதிமன்றம்!

Devaraj

கொரோனா 2ம் அலை: இவ்வளவு பேருக்கு வேலையிழப்பா? ஆய்வில் தகவல்..!

Lekha Shree

தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி., உத்தர்காண்ட்டில் தனித்து போட்டி…!

sathya suganthi