பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இன்று விசாரணை!


பஞ்சாப்பில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் பஞ்சாப் வந்த பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார்.

Also Read  ஆன்லைன் வகுப்பில் இருந்த மகள் நனையாமல் இருக்க குடை பிடித்து நின்ற தந்தை! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
PM Narendra Modi to inaugurate second campus of Kolkata's Chittaranjan  National Cancer Institute today | India News | Zee News

அப்போது,பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் நின்றது.இதைத்தொடந்து,பிரதமரின் வருகை,திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும்,முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும்,பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதற்கிடையில்,உடனடியாக பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பிச்சென்றார்.விமான நிலையம் சென்ற பிரதமர், நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன்.உங்கள் முதல்வருக்கு அதற்காக நான் நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என பதிண்டா விமான நிலையத்தில் இருந்த பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகினது.இவ்வாறு,பிரதமர் சென்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து பஞ்சாப் அரசு மீது பாஜகவினர் கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

Also Read  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! - எங்கு தெரியுமா?

இதனைத் தொடர்ந்து,பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்தது பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.இந்த உயர்மட்டக்குழு 3 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

Also Read  குழந்தைகளுக்கு கோவாக்சின் செலுத்த மத்திய அரசு ஒப்புதல்? - மத்திய அமைச்சர் விளக்கம்..!

வழக்கறிஞர் மணிந்தர் சிங்கின் மனுவை ஏற்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாகாலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதி உத்தரவு மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

Lekha Shree

டெல்டா வகையை விட 3 மடங்கு வேகமாக பரவும் ஒமிக்ரான்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!

suma lekha

ஜூலை 16ம் தேதி பள்ளிகள் திறப்பு – எங்கு தெரியுமா?

Lekha Shree

கேரளாவில் அதிரடி காட்டும் கோவிட்-19!

Tamil Mint

சர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர் சிவன், குவியும் வாழ்த்துகள்

Tamil Mint

மத்திய அமைச்சராக முருகன் நியமிக்கப்பட காரணம் இதுதான்…!

sathya suganthi

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1511 கோடி வசூல்!

Tamil Mint

“காஷ்மீரில் எப்போது கருப்புப் பனி பெய்யும்?” – குலாம் நபி ஆசாத் நையாண்டி!

Tamil Mint

வாகனத்தில் கட்டிவைத்து நாயை வதைத்த கல்நெஞ்சக்காரர் கைது…!

Lekha Shree

யார் இந்த ஸ்டேன் சாமி? இவர் கைதாக என்ன காரணம்? நாடு முழுவதும் இவர் இறப்பை பற்றி பேசுவது ஏன்?

Lekha Shree

ட்விட்டர் நிறுவனத்தின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு!

Shanmugapriya

“Go Corona Go” – கடந்த ஆண்டு நினைவுகளை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

Lekha Shree