“போலீஸ்காரருக்கு முத்தம் கொடுத்த இளம்பெண்” – வீடியோ வெளியானதால் சர்ச்சை


கோவையில் இளம்பெண் ஒருவர் போலீஸ்காரருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி பார்க்கில் ஒரு போலீஸ்காரர் சீருடையில் அமர்ந்திருந்தார். அவரின் அருகே முகத்தை துணியால் மூடியபடி ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார். இருவரும் ஜாலியாக பேசி கொண்டிருந்தபோது அந்த இளம்பெண் திடீரென போலீஸ்காரருக்கு முத்தம் கொடுத்தார். இந்த காட்சியை அங்கேயிருந்த நபர் ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார்.

பின்னர் அங்கேயிருந்தவர்கள், நீங்கள் காவல்துறையில் இருந்துகொண்டு பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பினர். நீங்க காதலரா, கணவன்-மனைவியா?, என்ன உறவு? என்று கேட்டபோது அதற்கு அந்த பதில் சொல்ல முடியாமல் போலீஸ்காரர் திணறினார். இந்த வீடியோ போலீஸ் உயரதிகாரிகளுக்கு போனது.

Also Read  காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆணழகன் கைது….

இதில் பார்க்கில் அமர்ந்து பேசியது கோவை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரரான பாலாஜி  என்பது தெரியவந்தது. இவர் காதல் திருமணம் செய்திருப்பதும், 2 குழந்தைகள் இருப்பதும், பி.ஆர்.எஸ் மைதானத்தில் வசிப்பதும் தெரியவந்தது. பாலாஜியை முத்தமிட்டது அவரது உறவினர் பெண் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோவை மாநகர ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன் விசாரணை நடத்தினார். சீருடையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக பாலாஜியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். .


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் வகுப்பில் ஏற்பட்ட விபரீதம்… மாணவர்கள் கவலை…‌

VIGNESH PERUMAL

லக்கிம்பூர் சம்பவம்: உ.பி. அரசை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்: அடுத்த நாளே மத்திய அமைச்சரின் மகன் கைது.!

mani maran

பாலியல் புகார் – பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் கைது!

Lekha Shree

திருட முயன்று ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிய திருடன்… நாமக்கல்லில் நிகழ்ந்த வேடிக்கை சம்பவம்..!

Lekha Shree

வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தாரா சச்சின் டெண்டுல்கர்?

Lekha Shree

புதுமணப்பெண் தீக்குளித்து தற்கொலை….

VIGNESH PERUMAL

காவல்துறையினரின் காலில் விழுந்து கதறிய ‘பப்ஜி’ மதன்…!

Lekha Shree

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு – சென்னை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

கள்ளக்காதலுக்கு இடையூறு!!! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…

Lekha Shree

தலையணையால் முகத்தை அமுக்கி கொலை..! முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மரணத்தில் திடுக்கிடும் தகவல்…!

sathya suganthi

பிரபல மல்யுத்த வீராங்கனை மர்மநபர்களால் சுட்டுக்கொலை…!

Lekha Shree

திருடர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகை…! மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree