தியேட்டர்கள் இந்த தினங்கள் இயங்க தடை வழங்கவேண்டும் என வழக்கு.!


திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க இந்த இந்த தினங்களில் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதால் நவம்பர் 1ம் தேதி முதல் 100 % இருக்கையுடன் இயக்க் அனுமதி அளிக்கப்பட்டது.

Also Read  தமிழகம்: 11,712 பேர் கொரோனாவிற்கு பலி

இந்நிலையில் திரையரங்குகள் 100% அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 3,4ம் தேதிகளில் திரையரங்குகளை மூட உத்தரவிடக்கோரி சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

Also Read  PhD படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

தொடர்ச்சியாக திருவிழா காலமாக இருப்பதால், கொரோனா நோய் தடுப்பு வழி முறைகளை, பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது கொரோனா பரவலை அதிகரிக்க செய்யும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read  "எங்கள் ஸ்டைலில் கொரோனாவை விரட்டுவோம்!" - வடகொரிய அதிபர் பேச்சால் சர்ச்சை..!

இதன் காரணமாக நவம்பர் 3,4ம் தேதிகளில் திரையரங்குகளை மூட உத்தரவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிங்கங்களுக்கு கொரோனா – எப்படி பரவியது?

Lekha Shree

‘மக்களே உஷார்…!’ – மேட்ரிமோனி வெப்சைட் மூலம் இப்படியும் ஒரு மோசடி…!

Lekha Shree

அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தானி பெண்… வைரல் போட்டோஸ்…!

HariHara Suthan

ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; ககன்தீப் சிங் பேடி அதிரடி திட்டம்!

Lekha Shree

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் சென்னை வருகை!!

Tamil Mint

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள்: திறந்து வைத்தார் முதல்வர்

Tamil Mint

‘குக்கு வித் கோமாளி’ செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் டீசர் இன்று வெளியீடு…!

Lekha Shree

ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #ஒத்த_ஓட்டு_பாஜக ..!

Lekha Shree

திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை

Tamil Mint

செம்ம… சிறுத்தை சிவாவுடன் இணையும் சிங்கம் சூர்யா…

suma lekha