“நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை” – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பரவி வரும் தகவல்கள் பொய்யானது என்றும் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை விட மின் தேவை அதிகமாக உள்ளதால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து தனது வருடாந்திர இலக்குகளை எட்ட முடியாமல் தவித்து வருகிறது என்றும் கூறப்பட்டது.

Also Read  ராஜஸ்தான் : தாயத்து செய்ய புலி மீசையை வெட்டிய வனத்துறை அதிகாரிகள்!

இந்நிலையில், இதை பற்றிய அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “இந்தியா ஒரு மின் உபரி நாடு. மின்துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் சில நாட்களுக்கு முன்புதான் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக பரவும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது என்று தெரிவித்தார்.

Also Read  மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை – தேர்தல் பார்வையாளர்கள் அதிரடி ரிப்போர்ட்

மின்சாரம் தயாரிக்கும் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு அந்த ஆலைகளிலேயே உள்ளது. மேலும் நாட்டின் நிலக்கரி விநியோகச் சங்கிலியில் எந்த பாதிப்பும் இல்லை” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புளூ டிக்கிற்காக சண்டையிடும் பாஜக அரசு – ராகுல் காந்தி கலாய்…!

sathya suganthi

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடு!!” – இஸ்லாமியரை மிரட்டிய இருவர் கைது..!

Lekha Shree

அட்ரஸ் கேட்பது போல் பெண்ணின் அங்கத்தை தொட்ட இளைஞர்: சரியான பதிலடிக் கொடுத்த பெண்.!

suma lekha

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

நான் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

Tamil Mint

கொரோனா புதிய பாதிப்புகளை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்…!

sathya suganthi

கொரோனாவால் மரணத்தின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தாய்… உருக்கமாக பாடல் பாடிய மகன்..!

Lekha Shree

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம் – ஆந்திர அரசு அனுமதி

sathya suganthi

தென்மேற்கு பருவமழை தொடங்கியது… அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

பெட்ரோல் விலை 22 நாட்களாக மாறாத மாயம் என்ன?

Devaraj

இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree