சூரி வீட்டிலேயே கை வைத்த திருடன்…!


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது வெற்றி மாறன் இயக்கும் விடுதலை திரைப்ப்டத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த, சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார் சூரி.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் தனது குடும்பத்தின் மீது அதீத நன்பும் கவனமும் கொண்டவர் சூரி. கடந்த வாரம் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகளுக்கு மதுரையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காலம் என்பதால் மிக குறைந்த அளவிலான நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். சினிமா துறையை பொறுத்தவரை விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் மட்டும்தான் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தின் போது நடிகர்கள் சிலர் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் கூட இணையத்தில் வெளியாகி, வைரலாகின.

Also Read  சத்குருவுடன் ஆனந்த நடனமாடிய நடிகை சமந்தா!

இந்நிலையில் இந்த திருமண விழாவில், திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மணமகள் அறையில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன நகையின் மதிப்பு 2 லட்சம் என கூறப்படுகிறது. தகவல் தெரிந்து நகையை தேடிய போது, எங்கும் கிடைக்கவில்லை. திருமண விழாவில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து விட்டதே என சூரி குடும்பத்தினர் அதிர்ச்சி கலந்த கவலையில் உள்ளனர்.

Also Read  பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின்

திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் முதலில் சூரியின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுக்காமல் விட்டு விட்டனர். பிறகு குடும்பத்துடன் நன்கு கலந்து ஆலோசித்த பிறகு, மதுரை – கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமணத்தில் நகை திருடியதாக விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 10 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை திருடிய விக்னேஷ் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read  துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தளபதி’ விஜய்யிடம் கோரிக்கை வைத்த விஜய் டிவி டிடி…!

Lekha Shree

ஜூலையில் தொடங்கும் தனுஷின் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு..!

Lekha Shree

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்; கடுப்பான அஜித் வெளியிட்ட அறிக்கை!

Tamil Mint

குடிப்பழக்கத்துக்கு குட்பை சொன்ன சிம்பு! – அவரே தெரிவித்த தகவல்!

Lekha Shree

விஜய்க்கு நடனமாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

Tamil Mint

வைரலாகும் அஜித்-சிவகார்த்திகேயனின் அரிய புகைப்படம்…!

Lekha Shree

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான்.!

Lekha Shree

இயக்குனராக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…!

Lekha Shree

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!

Lekha Shree

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

ராஜா ராணி சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோ சூட் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

Devaraj