பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.


அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை பற்றி  விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்  “நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் துணை முதல்வர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அதை முதல்வரும் ஆமோதித்து இருக்கிறார். இந்தக் கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ அதைப்போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் இக்கூட்டணியை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்பது உறுதி. 

Also Read  தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா

இந்நிலையில், பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் போட்டிப் போட்டுக்கொண்டு ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். இதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதிமுகவை பாஜகவுக்கு சரணடைய வைத்திருக்கும் இந்த துரோகச் செயலை அதிமுகவை துவக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்களும் இதை மனமார ஏற்க மாட்டார்கள். தமிழ் நாட்டு நலனை அடகு வைத்தது மட்டுமின்றி, இப்போது தங்களது கட்சியையும் பாஜகவுக்கு அடகு வைத்து விட்டனர்.இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழக மக்கள் இந்தத் துரோகச் செயலுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”. என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,964 ஆக அதிகரிப்பு.!

suma lekha

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு அப்டேட்.!

suma lekha

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

தமிழகத்தில் வெகுவாக குறைந்த கொரோனா உயிரிழப்புகள்…!

Lekha Shree

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்! எங்கு தெரியுமா?

Lekha Shree

நடிகை மீரா மிதுனுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

suma lekha

விஜயகாந்த்-உதயநிதி ஸ்டாலின் திடீர் மீட்…! காரணம் இதுதானா…!

sathya suganthi

“ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரருக்கு ரூ.3 கோடி பரிசு” – முதலமைச்சர் அறிவிப்பு

Lekha Shree

தடகள பயிற்சியாளர் மீது குவிந்த பாலியல் புகார்கள் – நாகராஜனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

முழு ஊரடங்கு – வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!

Devaraj

“சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!” – தனுஷ், கனிமொழி தற்கொலை குறித்து கமல் ட்வீட்..!

Lekha Shree

யுவனின் குரலில் ‘வென்று வா வீரர்களே’..! பாடலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

Lekha Shree