“பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை!” – ஸ்டேன் சுவாமி மறைவு குறித்து திருமாவளவன் ட்வீட்!


பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போது, “பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை” என பதிவிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

பழங்குடியின மக்களுக்காக போராடிய ஒரே தமிழரான ஸ்டேன் சுவாமி மும்பையில் உள்ள சிறையில் இன்று காலமானார். இவருக்கு வயது 84.

அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் திருச்சி மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பிறந்தார்.

கத்தோலிக்க பாதிரியாராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுபவர் ஸ்டேன் சுவாமி. கடந்த 50 ஆண்டுகளாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்திய ஒரே தமிழர் இவர்.

Also Read  கொரோனா 2ம் அலை எதிரொலி - 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

ஆனால், இவருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி தேசிய புலனாய்வு முகமை அவரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது.

மேலும் ஸ்டேன் ஸ்வாமி ஒரு மாவோயிஸ்டு எனவும் அவர் நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

Also Read  சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டிய நபர்... அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்!

இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று வரையிலும் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டுப் போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், எல்கர்-பரிஷத் வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக வெளியான இவரது மரண தகவலை அறிந்த இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  வீடுதோறும் வாஷிங்மிஷின் வழங்க அரசிடம் எங்கு பணம் உள்ளது? – சீமான்

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான்சாமி உயிரிழந்தார்.

பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் பயங்கரவாதத்தை’ வன்மையாகக் கண்டிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் தந்தையை இழந்து வாடும் இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

“கடலில் குதித்து நீந்தினாலும் ராகுல் காந்தியால் வெற்றி பெற முடியாது!” – குஷ்பு

Shanmugapriya

பியூச்சர் குழுமம் மற்றும் அமேசான் நிறுவனம் இடையே மோதல் !! டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

Tamil Mint

‘Say No to Plastic’ – அட்டை பெட்டிகளில் தண்ணீர் விற்கும் நபர்கள்!

Lekha Shree

முழு ஊரடங்கை நீட்டிக்க முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

sathya suganthi

அண்ணா அறிவாளயத்தில் வெற்றி கொண்டாட்டம்: காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்!

Lekha Shree

இரவு நேர ஊரடங்கு – பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

Lekha Shree

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

வினோத திருமணம்: சேலை கட்டிய மணமகன்… பட்டு வேட்டியில் மணமகள்…!

Lekha Shree

“அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடிக்கு எதிராக விசாரணை வேண்டும்” – ராகுல் காந்தி

Lekha Shree

அயோத்தி ராமர் கோவில் மக்கள் நன்கொடை கொண்டே கட்டப்படும்: அறக்கட்டளை நிர்வாகி

Tamil Mint

நாமக்கல் மாவட்டத்தில் நோட்டாவிடம் தோற்ற 116 வேட்பாளர்கள்…!

sathya suganthi