திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்


திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாள்கள் நடைபெறும் விழாவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

டிசம்பர் 27ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் கோயில் செயல் அலுவலரும் முடிவு எடுத்தார்கள். 

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கோயிலுக்குள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்த்தங்களில்  நீராட அனுமதி இல்லை என்று புதுச்சேரி இந்து அறநிலையத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என்று ஸ்தானிகர் சங்க தலைவர் நாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also Read  அதிமுக உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை : சபாநாயகர் அப்பாவு விளக்கம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும் தரிசனத்துக்காக ஒரு நாளைக்கு எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்? என கேள்வி எழுப்பினார். 

அதற்கு, சனிப்பெயர்ச்சி தினமான 27ம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நள, பிரம்ம தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதித்துள்ளோம். தனி மனித இடைவெளி பின்பற்றும் வகையில்,வரிசை 3 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. 

Also Read  "நானும் ரெளடி தான்” போலீசை மிரட்டிய பெண்! வைரஸ் வீடியோ!

நுழைவாயில்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல், கோயிலுக்குள் முகக்கவசம் அணிதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 140 இடங்களில் இடங்களில் பக்தர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், கொரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

Also Read  இன்னும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அவதூறு பேச்சு: நேரில் ஆஜராவாரா ஆ.ராசா?

Lekha Shree

புதுக்கோட்டை: சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்… மூழ்கிய காரில் மூச்சுத்திணறி உயிரிழந்த மருத்துவர்..!

Lekha Shree

நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவு – புதிய அறிவுப்பை இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்…!

sathya suganthi

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

Tamil Mint

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Tamil Mint

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

Devaraj

பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ், காரணம் என்ன?

Tamil Mint

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – தனிப்படை அமைப்பு..!

Lekha Shree

தீவிர புயலாக மாறும் ஷாகீன்…! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் டியூனில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீயணைப்பு வீரர்கள்!

Lekha Shree

ட்ரெண்டான “ஜம்புத்தீவு பிரகடனம்” – ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்த வரலாறு தான் என்ன?

sathya suganthi