சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை: நாடகமாடிய ஊழியர் கைது!


சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பணம் கொள்ளைபோனதாக நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டரில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக தகவல் வெளியானது. அங்குள்ள ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி கவுண்டரில் இருந்த 1,32,500 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்பட்டது. மேலும், கொள்ளை கும்பல் கவுன்டரில் இருந்தவர்களை அறையில் அடைத்து பூட்டு போட்டு விட்டு சென்றதாக தகவல் வெளியானது.

Also Read  அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் காலமானார்! - பல்வேறு தலைவர்கள் இரங்கல்!

இதனைத் தொடர்ந்து, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்தோரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரயில்வே எஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் அமைக்கப்பட்ட 2 தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தது.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கட்டிப்போட்டுவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

Also Read  "தமிழகத்தில் விரைவில் 'கலைஞர் உணவகம்' தொடங்கப்படும்" - அமைச்சர் சக்கரபாணி

திருவான்மியூர் ரயில் நிலைய கவுண்ட்டரில் ரூ. 1,32, 500 கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காராம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாத நிலையில் அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சிசிடிவி காட்சிகளில் டீக்காராமின் மனைவி ரயில் நிலையத்திற்குள் செல்வதை வைத்து போலீஸ் இவர்களின் நாடகத்தை கண்டுபிடித்துள்ளது.

Also Read  அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ; திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது

Tamil Mint

கவிதை நயத்தில் பேனர் வைத்த மதுப்பிரியர்கள்…! ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு நூதன கோரிக்கை…!

Devaraj

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

திருமாவளவன் இருக்கை மேல் நடந்து சென்றது ஏன்? – வன்னியரசு விளக்கம்

Lekha Shree

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை

sathya suganthi

குளிர்பானத்தில் மதுபானம் கலந்துகொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன்!

mani maran

இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

Tamil Mint

5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு!

Lekha Shree

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

சசிகலா குறித்து விசாரித்த ரஜினிகாந்த்… டிடிவி-யின் பரபரப்பு பேட்டி!

Tamil Mint

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்…!

Lekha Shree