இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவர்தான்? வெளியான அப்டேட்..!


நடிகர் கமல்ஹாசன் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்ததிலிருந்து அவருக்கு பதில் இனி யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு தமிழிலும் ஒளிபரப்பானது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 4 சீசன்களும் ஹிட் அடித்தன. தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

வழக்கம்போல் இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அதையடுத்து நதியா சங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

Also Read  93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

சில தினங்களுக்கு முன்னர் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கமல் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்ததாக தொகுத்து வழங்க உள்ளவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

Also Read  27 நாள் கால்ஷீட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா?.... கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் கேட்ட பெரும் தொகை...!

இதற்கிடையே கமலின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

Also Read  அறுவை சிகிச்சை முடிந்தது… இப்போது எப்படியிருக்கிறார் அமிதாப் பச்சன்…!

அதோடு அவர் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் விரைவில் அனைவருடனும் பேச நடிகர் கமல்ஹாசன் ஆவலோடு காத்து இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என தகவல்கள் உலா வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ப்ளு சட்டை மாறன் படத்திற்கு இந்த நிலையா?…..

VIGNESH PERUMAL

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு விரைவில் திருமணம்..!

Lekha Shree

ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! “கர்ணன்” ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!

Devaraj

ஆர்யா பண மோசடி வழக்கில் திடீர் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது

suma lekha

‘பிக்பாஸ்’ வனிதா 4வது திருமணம்? – சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி..!

Lekha Shree

நவம்பர் 2ம் தேதி வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’…!

Lekha Shree

விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் இணைந்த யோகி பாபு..!

suma lekha

“நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல” – மருத்துவர்

Lekha Shree

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘777 சார்லி’ படம்…! டீசரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்…!

sathya suganthi

‘பீஸ்ட்’ அப்டேட் கொடுத்துள்ள இயக்குனர் நெல்சன் திலீப்குமார்…!

Lekha Shree

‘திரெளபதியின் முத்தம்’… கர்ணன் படத்தின் 3வது சிங்கிள் இன்று ரிலீஸ்…!

malar