“அடுத்த ஆர்சிபி கேப்டன் இவர்தான்!” – Hint கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!


2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக இவர் நியமிக்கப்படலாம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Also Read  இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தூக்கப்படும் விராட் கோலி?

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர். இதனால், அவருக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

விரைவில் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வார்னர் பல விமர்சனங்களுக்கு ஆளானார்.

“அவருக்கு வயதாகிவிட்டது அதனால் தான் பேட்டிங்கில் சொதப்புகிறார்” என பல கமெண்ட்ஸ்கள் வந்தன. ஆனால், அதற்கெல்லாம் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மூலம் விடையளித்து விட்டார் வார்னர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் இதுகுறித்து கூறுகையில், “ஐபிஎல் 2022ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி - நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை..!

கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் அந்த அணிக்கு நல்ல தலைமை தேவை. அதற்கு நிச்சயமாக வார்னர் நல்ல தேர்வாக இருப்பார்.

அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடமாட்டார் என்று நினைக்கிறேன். அந்த அணியின் நிர்வாகத்துக்கும் வர்னருக்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்றே நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

Also Read  "தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை!" - சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி – வெற்றியின் ரகசியத்தை கூறிய கே.எல்.ராகுல் !

Lekha Shree

ஆல் இந்தியா பேட்மிட்டன் தொடர் – பிவி சிந்து தோல்வி

Devaraj

“மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாடுவீங்களா?” – சிரித்து கொண்டே தோனி கூறிய அல்டிமேட் பதில்..!

Lekha Shree

விளையாட்டு வீரர்களுக்கு தடையை நீக்கிய தமிழக அரசு

Tamil Mint

விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! – ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

‘வாத்தி கம்மிங் ஒத்து!’ – இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம்..!

Lekha Shree

ஐபிஎல் 2021: பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்த ஐதராபாத் அணி…!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் – இந்திய வீராங்கனை மேரிகோம் தோல்வி..!

Lekha Shree

சின்னப்பம்பட்டியின் சின்னத்தம்பிக்கு மாஸ் ஆன வரவேற்பு!

Tamil Mint

டோக்கியோ பாராலிம்பிக் : இந்திய கொடியை ஏந்தி சென்ற தங்க மங்கை

suma lekha

கோலி அதிரடி வீண் – இங்கிலாந்து அசத்தல் வெற்றி

Devaraj