ரூ.1 கோடி இருந்தால் விண்வெளி செல்லலாம்…!


அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளி சுற்றுலாவுக்கு டிக்கெட் விற்பனை செய்யத் துவங்கி உள்ளது.

புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நிறுவனம் பிரமாண்ட பலுானில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பூமியின் அழகை ரசிக்க ஏற்பாடு செய்துள்ளது.

6 மீட்டர் பலுானை ஹீலியம் வாயு வாயிலாக ஒரு கால்பந்து மைதானத்தின் விட்டத்திற்கு விரிவுபடுத்தி, விண்ணில் செலுத்துகிறோம் என அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஜேன் பான்ட்டர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆளில்லாமல் அனுப்பிய பலுான் வெற்றிகரமாக, 1 லட்சம் மீட்டர் உயரம் பறந்து, பத்திரமாக தரையிறங்கியது என்றும் இதைத் தொடர்ந்து மனிதர்களை பலுானில் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  டிரம்ப் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்: டிக்டாக்குக்கு கடைசி கெடு விதித்த அமெரிக்க அதிபர்

ஆறு மணி நேர பயணத்திற்கு, ஒரு டிக்கெட் விலை 1 கோடி ரூபாய் என நிர்ணயித்துள்ளோம் என தெரிவித்துள்ள ஜேன் பான்ட்டர், ஒரு பயணத்தில் கேப்டன் உட்பட எட்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்றார்.

டிக்கெட் பதிவு துவங்கிய சில நிமிடங்களில் 300 பேர் பணம் செலுத்தி விட்ட நிலையில், 2024ம் ஆண்டு வரை சுற்றுலா பயணத்திற்கான பதிவு முடிந்து விட்டது என கூறினார்.

Also Read  ஐபோன் என நினைத்து ஐபோன் போன்று இருக்கும் மேஜையை ஆர்டர் செய்த சிறுவன்! - பிறகு என்ன ஆனது தெரியுமா?

2025ம் ஆண்டுக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளதென்றும் இந்த பலுானில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி அறைகள் உள்ளன என்றும் இணையம் வாயிலாக பூமியில் உள்ள உறவினர்களுடன் நேரடியாக பேசும் வசதியும் உள்ளது என்றும் இந்த திட்டம் சுற்றுலா ஆர்வலர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என்றும் ஜோன் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மறுபடியும் முதல்ல இருந்தா?” – மீண்டும் வூஹானில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

Lekha Shree

குறுக்கு நெடுக்காய் சிக்கிய கப்பலில் கேப்டன் உள்பட 25 ஊழியர்களும் இந்தியர்கள்…! சூயஸ் கால்வாயில் நடப்பது என்ன?

Devaraj

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி? எங்கு தெரியுமா?

Lekha Shree

இரண்டு புலிகளின் ஆக்ரோஷமான சண்டை! – சிலிர்க்கவைக்கும் வீடியோ!

Tamil Mint

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?

Shanmugapriya

கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

Devaraj

3 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி..! எங்கு தெரியுமா?

Lekha Shree

கொரோனா அண்டாத 5 நாடுகள்…! கொடுத்து வைத்த நாடுகளின் பட்டியல் இதோ…!

Devaraj

உலக அளவில் கிடுகிடுவென அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை

Tamil Mint

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் முடக்கம்…!

sathya suganthi

கொரோனா 2ம் அலை தீவிரம் – இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

Lekha Shree

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ட்ரம்பின் அடுத்த திட்டம் இதுதான்!

Tamil Mint