a

டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!


14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டிக் டாக் பிரபலம் பார்கவ்-ஐ ஆந்திரா போலீசார் கைது செய்துள்ளனர்.

டிக் டாக்கில் “ஓ கடவுளே! ஓ கடவுளே!” என்ற காமிக் டிக்டாக் வீடியோக்களால் பிரபலமடைந்தவர் பார்கவ். இவர் Funbucket என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஆந்திரா மாநிலம் விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் பார்கவ். தற்பொழுது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சினகிரி காலணியில் வசித்து வருகிறார். அதே காலணியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அண்ணன் தங்கையாக பழகுவதாக நினைத்துள்ளனர்.

இந்நிலையில் அச்சிறுமிக்கு சில நாளாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். அவர் அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் அச்சிறுமியிடம் வினவியதற்கு பார்கவ் தான் காரணம் என தெரியவந்துள்ளது.

Also Read  மனைவியின் நடத்தையில் சந்தேகம்! - பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த கணவர்! - அதிர்ச்சி சம்பவம்!

இதையடுத்து அச்சிறுமியின் தாயார் ஏப்ரல் 16ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து பெண்டூர்தி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பார்கவ்வை கைது செய்துள்ளனர்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 376 மற்றும் 354 section-களின் கீழும் பார்கவ்வை கைது செய்துள்ளனர்.

Also Read  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் - 16 பேர் பலி

கடந்த 2019ம் ஆண்டு ஆந்திராவில் கால்நடை மருத்துவருக்கு படித்து வந்த மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு பின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க திஷா போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.

எனவே, இந்த வழக்கும் திஷா போலீசாருக்கு மாற்றப்பட்டது. இது குறித்து திஷா உதவி ஆணையர் பிரேம் காஜல் கூறுகையில், “பார்கவ் அச்சிறுமிக்கு புரொபோஸ் செய்துள்ளார். ஆனால், அச்சிறுமி அதை ஏற்க மறுத்துள்ளார். அப்போது அச்சிறுமியின் தவறான வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்பொழுது அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்” என கூறினார்.

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற மன்றாடும் டாக்டர் கபீல் கான்…!

திஷா போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

Tamil Mint

310 கி.மீ நீள நீர்வழித்தடத்தில் சூரியசக்தி படகில் பயணம் செய்த முதல்வர்!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போடப் போறீங்களா..? அப்ப இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

Lekha Shree

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

Tamil Mint

ட்ரோன்கள் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோகம் – மத்திய அரசு அனுமதி!

Lekha Shree

தமிழ் கற்க முடியாதது வருத்தமளிக்கிறது… பிரதமர் மோடி

HariHara Suthan

கொரோனா தடுப்பூசி – 10ல் ஒருவர் மட்டுமே 2வது டோஸ் பெற்றதாக தகவல்

Tamil Mint

இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜின் தந்தை மரணம்

Tamil Mint

‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Tamil Mint

பள்ளிக்கூடத்தை கூட தாண்டாமல் பலே பதவிகளை ஸ்வப்னா பெற்றது எப்படி? பகீர் தகவல்கள்

Tamil Mint

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree