ரவுடி பேபி சூர்யாவிற்கு அட்வைஸ் செய்த டிக்டாக் சூர்யா


சமூக ஊடகங்களில் ஆபாசமாக பேசி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

யூடியூபில் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் சமீப காலமாக ஆபாசமாக பேசி வருவதாக புகார்கள் எழுந்தன. அந்தவகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சூர்யாவுக்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரையில் தலைமறைவாக இருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Also Read  தமிழகம்: முழு ஊரடங்கின் போது மதுபானக் கடைகள் இயங்க தடை!

இந்த நிலையில் கார்த்திக்கை தேடிக் கொண்டிருந்த டிக்டாக் திவ்யா, ரவுடி பேபி சூர்யா குறித்து வீடியோ பதிவு ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “ எனக்கும் உங்களை போல் ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். மூன்று முறை ஜெயிலுக்கு சென்று விட்டு தற்போது எவ்வளவு ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். சூர்யா அக்கா நீங்கள் நல்ல நாளில் ஜெயிலுக்கு போயுள்ளீர்கள். நீ அங்கையே இருந்துகோ அக்கா. வெளியே வந்தால் நமக்கு வீடு தர மாட்டார்கள் . எனவே ஜெயிலில் இருப்பது தான் நல்லது” என தெரிவித்துள்ளார்.

Also Read  "வீடு வேண்டும்" - முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த 'ரவுடி பேபி' சூர்யா..!

அது மட்டுமல்லாமல் புதன்கிழமை தேங்காய் சோறு, ரசம் உட்பட வாரத்தில் என்ன உணவுகள் கிடைக்கும் என்றும் திவ்யா கூறியுள்ளார். “வாரத்தில் ஒருநாள் பெரிய உருளைக்கிழங்கு உருண்டை ஒன்றையும் தருவார்கள். ஆனால் சென்ட்ரல் ஜெயிலில் தான் அதிகமாக உணவு கிடைக்கும். சப் ஜெயிலில் சற்று குறைவாக தான் கிடைக்கும். ஆனால், உங்களுக்கு பதினைந்து நாளில் பெயில் கிடைத்து விடும். கண்டிப்பாக வெளியே வருவீர்கள்” எனவும் திவ்யா தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆனால், வெளியே வந்தால் என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டியது இருக்கும். ஜெயிலில் இருப்பதே நல்லது” எனவும் டிக்டாக் சூர்யாவிற்கு திவ்யா அறிவுரை கூறியுள்ளார்.

Also Read  ஆபாச பதிவு - யூடியூபர் திவ்யா கைது..!

இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்!

suma lekha

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது!

Tamil Mint

பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி காலமானார்!

Lekha Shree

ஆக்ஸிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை – தமிழக அரசு

sathya suganthi

ரூ.33 லட்சம் 213 சவரன் நகையுடன் சிறுவன் மாயம்!!! பெற்றோர் திட்டியதால் நேபாளம் தப்ப முயற்சி…..

Lekha Shree

தொழிலதிபரை அடித்து சொத்துக்களை எழுதி வாங்கியதாக போலீஸ் மீது புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு

sathya suganthi

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பத்து நாட்கள் விடுமுறை

Tamil Mint

விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் உலவும் ஆபாச விமர்சனங்கள்

Tamil Mint

வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் – மு.க.ஸ்டாலின்

Devaraj

கே.டி. ராகவன் தொடர்பான சர்ச்சை வீடியோவை வெளியிட்ட ‘Madan Diary’ யூடியூப் சேனல் முடக்கம்!

Lekha Shree

தி.நகர்,ரெங்கநாதன் தெருவில் கடைகளை திறக்க அனுமதியில்லை- சென்னை மாநகராட்சி அதிரடி

suma lekha

சென்னை உள்பட சில மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி : முழு விவரம் இதோ…!

sathya suganthi