a

இதை செய்யவில்லை எனில், ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கும்.. சீரம் நிறுவனம் தகவல்


இந்தியா தற்போது கொரோனாவின் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.. நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை..

இதனிடையே இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதலில் முன்கள பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 2-வது கட்டத்தில் 45 மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது.. தற்போது கடந்த 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Also Read  கொரோனா 2ம் அலை - 60 போலீசார் உயிரிழப்பு!

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்கும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “ கொரோனா தடுப்பூசி உற்பத்தியை 60 முதல் 70 மில்லியனிலிருந்து 100 மில்லியன் அளவிற்கு உயர்த்தவில்லை என்றால், ஜூலை மாதம் வரை கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இதே போன்று நீடிக்கும். எனவே மாதத்திற்கு 100 மில்லியன் தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும்.

Also Read  பல லட்சம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்த இந்தியா - அமெரிக்க பாராட்டு !!!

கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா இரண்டாம் அலை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி – ட்வீட் செய்த மோடி

Devaraj

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

Tamil Mint

வயலின் மேதை டி என் கிருஷ்ணன் காலமானார்

Tamil Mint

இன்றைய கொரோனா அப்டேட் – ஒரே நாளில் 4,092 பேர் பலி…!

sathya suganthi

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

“ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும்!” – மாநில அரசு

Lekha Shree

மிரட்டும் கொரோனா; பிரசாரத்தை ரத்து செய்த மம்தா…!

Lekha Shree

லடாக்கில் ராஜ்நாத் சிங்: சீனாவுக்கு எச்சரிக்கை

Tamil Mint

நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது… அரசு கவனமுடன் தான் செயல்பட்டு வருகிறது – நிர்மலா சீதாராமன்!

Tamil Mint

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

Tamil Mint

ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

Devaraj