பாலினத்தை நிரூபிக்க திருநங்கைகளின் ஆடைகள் கலைப்பு ..! சர்ச்சையில் சிக்கிய திரிபுரா போலீசார்!


திரிபுரா காவல் நிலையத்தில் திருநங்கைகள் அவமானப்படுத்தப்பட்டு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திரிபுராவில் கடந்த சனிக்கிழமை இரவு 4 திருநங்கைகள் ஹோட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சி முடித்துவிட்டு வெளியே வந்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக சென்றவர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக வந்த புகாரின் பேரில் திருநங்கைகள் நால்வரையும் மேற்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு ஆண் மற்றும் பெண் போலீசார் சேர்ந்து திருநங்கைகளின் பாலினத்தை அறிவதற்காக அவர்களின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைந்து சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

Also Read  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்..!

மேலும் கிராஸ் டிரஸ் அணிந்து கொண்டு நகரில் சுற்ற மாட்டோம் என்றும் அவ்வாறு அணிந்து சுற்றினால் கைது செய்யப்படுவோம் என்றும் அவர்களிடம் போலீசார் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருநங்கைகள் காவல் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டு உள்ளதாக பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read  ஹெலிகாப்டர் கருப்பு பெட்டி - ஆய்வு செய்ய திட்டம்..!

மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் மிரட்டி பணம் பறித்ததாக தங்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக பாதிக்கப்பட்ட திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை கோரபட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் திரிபுரா காவல்துறை தெரிவித்துள்ளது.

Also Read  பாலியல் வழக்கு - ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடு முழுவதும் புதிதாக 45,083 பேருக்கு தொற்று பாதிப்பு: இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran

காதலன் செய்த செயல் அனைவரையும் முகம் சுழிக்கச் செய்துள்ளது…..

VIGNESH PERUMAL

“கோழிக்கு வயிற்றுப்போக்கு” – இவ்விடங்களில் வெளியே வந்த கர்நாடக நபர் சொன்ன காரணம்

Shanmugapriya

நிலவில் இடம் கொடுத்த நிறுவனம்! – ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree

மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் – மத்திய அரசு கவலை

Shanmugapriya

தக தக தங்க வேட்டை: யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

Tamil Mint

வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

suma lekha

ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி நீக்கம்? போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்..!

Lekha Shree

சீறிப் பாய்ந்த பைக்…! செக்போஸ்ட்டில் மோதி பலியான இளைஞன்…! பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

sathya suganthi

கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்- 2 ஆண்டுகள் சிறை.

Tamil Mint

தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு:

Tamil Mint

ஒடிசா: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை உத்தரவு!!

Tamil Mint