வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் 5 மணிநேரத்தில் விற்ற 50,000 இலவச தரிசன டிக்கெட்டுகள்…!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

அன்று முதல் 22 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி நாளில் ஆன்லைனில் ரூ. 300 டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்சவம் பெற்ற பக்தர்கள் மற்றும் வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இது தவிர உள்ளூர் மக்களுக்கு தினமும் 1000 டிக்கெட்டுகள் என 10 நாட்களுக்கு 50,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Also Read  "2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்" - தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

அதன்படி டிக்கெட்டுக்கள் பெற நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து திருப்பதி எஸ்.பி வெங்கடாசல அப்பல நாயுடு தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.

திருப்பதியில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் டிக்கெட் கவுண்டர்களில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டது தொற்று பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக புகார் எழுந்தது.

இதை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் கூட்டம் சேர்வது தவிர்க்க இரவு நேரத்திலேயே டிக்கெட் வழங்க முடிவெடுத்து.

Also Read  திருப்பதிக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா?

அதன்படி நேற்று முன்தினம் இரவு 9:30 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது இதையடுத்து நேற்று அதிகாலை 2:30 மணி அளவில் 50,000 டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவின் தவறான வரைபடம் – ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Lekha Shree

கப்பல் பார்ட்டியில் ஷாருக்கான் மகன் : தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

suma lekha

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

“அமேசானின் திட்டம் மத மாற்றம்!” – ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையில் வெளியான சர்ச்சை கட்டுரை..!

Lekha Shree

உங்களுக்கு 75 வயதாகிறதா? இனி Income Tax கிடையாது?

Tamil Mint

சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்…! மும்பை தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…!

sathya suganthi

மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு…! – கொரோனா 2வது அலை அச்சம்…!

Devaraj

ஷூ-வுக்கு பாலீஷ் போடச் சொல்லி டார்ச்சர்… அரசு வாகனத்தை எடுத்துக்கொண்டு பேம்லி டூர்… செலவின பார்வையாளர் மீது அடுக்கடுக்கான புகார்…!

Devaraj

தற்கொலைக்கு முயன்றாரா பிக்பாஸ் பிரபலம்?

Tamil Mint

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனிக் கட்சி தொடக்கம்?

Lekha Shree

இரவில் மதுபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்: காலையில் செல்போனை கானும் கண்டுப்பிடிச்சு கொடுங்கனு புகார்: வெளுத்து விட்ட போலீஸார்.!

mani maran

சிறுமியை துன்புறுத்தியவரை கொடூரமாக தாக்கி நிர்வாணமாக ஊர்வலம்… கர்நாடகாவில் பரபரப்பு..!

Lekha Shree