திருப்பதி: இலவச டோக்கன் விநியோகத்தால் குவியும் பக்தர்கள்… திணறும் தேவஸ்தானம்..!


கொரோனா அச்சுறுத்தலால் திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச டோக்கன் விநியோகம் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

திருப்பதியில் உள்ள சீனிவாச கட்டிட வளாகத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இலவசமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு 8000 எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், நாளை சாமியை தரிசிப்பதற்கு டோக்கன்களை வாங்க நேற்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் அதிகாலை 4 மணிக்கு திறக்க வேண்டிய கவுண்டர் இரவு 10 மணிக்கே திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கவுண்ட்டர்கள் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் டோக்கன்கள் தீர்ந்துவிட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற பக்தர்கள் தங்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று அங்கு பணியிலிருக்கும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வேறு வழியின்றி தேவஸ்தான நிர்வாகம் நாளை 23ஆம் தேதி சாமி தரிசனம் செய்வதற்காக வழக்கப்பட இருந்த 8000 டோக்கன்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.

Also Read  திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்..!

ஆனாலும், இன்னும் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். தற்போது இலவச தரிசன டோக்கன் வழங்கும் பெயரில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூட திருப்பதி தேவஸ்தானம் வழிவகை செய்து விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், திருப்பதியில் கொரோனா வேகமாக பரவும் அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Also Read  கையில் குழந்தை... சூட்கேசில் மனைவியின் பிணம்... கணவரின் கொடூர கொலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Tamil Mint

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் – 124 முதல் 154 தொகுதிகளில் அதிமுக பெற்றி பெறும் – ஹரித்வார் சுவாமி ஆரூடம்

Devaraj

“பாலியல் குற்றங்களில் DNA முடிவுகளை மட்டும் குற்றவாளிகள் ஆதாரமாக கூற முடியாது!” – உச்சநீதிமன்றம்

Lekha Shree

மேடையிலேயே மயங்கி விழுந்த குஜராத் முதலமைச்சர்

Tamil Mint

நகர்ப்புறங்களில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கத் திட்டம்

Tamil Mint

நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களியுங்கள், பின்னர் விழிப்புடன் இருங்கள் – பிரதமர் மோடி

Tamil Mint

வாட்ஸ்அப் பேமென்ட் வசதிக்கு இந்திய அரசு அனுமதி

Tamil Mint

கொரோனா கையில் கிடைத்தால் பாஜக தலைவர் வாயில் போட்டு விடுவேன் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Devaraj

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint

வாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி

Tamil Mint

பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை…! மத்திய அரசு முக்கிய அமைச்சர்கள் பதவி விலகல்…!

sathya suganthi

அமித்ஷாவை காணவில்லை – டெல்லி போலீசில் புகார்

sathya suganthi