முதல் தமிழன் – இந்திய பாராலிம்பிக் அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு!


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்று இந்திய அணியை வழி நடத்துகிறார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் முதல் தமிழன் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் தமிழக வீரர் மாரியப்பன்.

ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் 24 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அந்தவகையில் தமிழகத்திலிருந்து மாரியப்பன் உயரம் தாண்டுதல் பிரிவில் களமிறங்குகிறார்.

Also Read  நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

ஒலிம்பிக் தொடக்கவிழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் அணிவகுப்பில் பங்கேற்கபர். அந்நாட்டின் கேப்டன் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற வீரர்கள் அவரை பின் தொடர்ந்து அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியை தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வழிநடத்துகிறார்

Also Read  பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவருக்கு போலீஸ் வலை

இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தி இந்தியாவை வழிநடத்தும் முதல் தமிழன் என்ற பெருமையும் உலக அரங்கில் பறைசாற்ற இருக்கிறார் மாரியப்பன்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்கள் நடப்பு தொடரில் பங்கேற்கும் பட்சத்தில் அவர்களை தேர்வு செய்து கேப்டனாக அறிவித்து கௌரவித்து வருகிறது இந்திய விளையாட்டு அமைச்சகம்.

Also Read  தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?

அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து கேப்டனாகவும் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு மாரியப்பன் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாரியப்பன் கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலினை எதிர்க்கும், ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற திருநங்கை…!

Lekha Shree

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி – தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.

Jaya Thilagan

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்திய அணி திரில் வெற்றி!

Lekha Shree

“அதிமுக ஆட்சியாளர்களை களையெடுக்க வேண்டும்”: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

“கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் வழங்க கூடாது” – தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில்

Lekha Shree

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புது மாப்பிள்ளை ஜஸ்பிரித் பும்ராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

Jaya Thilagan

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – ஐபிஎல் க்கு தடை வராது என கங்குலி உத்தரவாதம்!

Jaya Thilagan

பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

Lekha Shree

மீண்டு வருவாரா கேன் வில்லியம்சன்? – நியூசிலாந்து அணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

HariHara Suthan

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறதா?

Tamil Mint

பாமகவை குறிவைத்து உடைக்கிறதா பாஜக?!

Tamil Mint

தொடரும் படுபாதகச் செயல்கள்: திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட 17 வயது மாணவி

Tamil Mint