a

தமிழக பாஜக எடுத்த அதிரடி முடிவு…! ஆணியே பிடுங்கிருக்க வேண்டாம்: எஸ்.வி.சேகர் கருத்து…!


தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த கூட்டத்தில், இனிமேல் பா.ஜ.க.வைச் சேர்ந்த யாரும் செய்தி நிறுவனங்களின் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

கமலாலயத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், இல.கணேசன், வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், குஷ்பு, கே.டி.ராகவன் மற்றும் கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

அதில், தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பாகப் பங்கேற்பவர்களுக்குத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கப் போதியளவு நேரம் கொடுக்கப்படுவதில்லை என்றும், அப்படியே தெரிவிக்க முயன்றாலும் எதிர்த்தரப்பினர் பேச விடாமல் தடுத்து பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் விமர்சிப்பதாகவும் பா.ஜ.க சார்பில் விவாதங்களில் தொடர்ச்சியாகப் பங்குபெற்று வரும் வானதி சீனிவாசன், கே.டி ராகவன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், விவாதங்களை முன்னெடுத்து நடத்தும் நெறியாளர்கள் நடுநிலையாகச் செயல்படாமல் பாரபட்சமாகச் செயல்பட்டுவருவதால், பா.ஜ.க சார்பில் இனி யாரும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாதென்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பா.ஜ.க நிர்வாகிகளின் கருத்துகளையும், அதிருப்திகளையும் கேட்டறிந்து கட்சியின் மாநில மூத்த தலைவர்கள் தற்காலிகமாக பா.ஜ.க சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக வலம் வந்தநிலையில், பாஜகவின் இந்த முடிவு, 3 வருடம் முன் எடுத்திருக்க வேண்டிய முடிவு என்றும் காலதாமதமான எடுக்கப்படும் முடிவு தேவையற்றது என்றும் பாஜக பிரமுகர் எஸ் வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.


Also Read  தேர்தல் விதியை மீறி ரூ.260 கோடி செலவு செய்த பாஜக - எஸ்.வி.சேகர் பரபரப்பு தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகளால் நிறைந்துள்ள ஆழ்கடல்? நீச்சல் வீரர்கள் அதிர்ச்சி!

Tamil Mint

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

பூலித்தேவன் பிறந்தநாள் விழா ரத்து

Tamil Mint

ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi

20 ஆண்டுகளுக்குப் பிறகு உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் திமுக! எந்த தொகுதியில் தெரியுமா?

Lekha Shree

தினகரன் மகளுக்கு திருமண ஏற்பாடு

Tamil Mint

“கொரோனா பாசிடிவ்” முறைகேடு – தமிழக பட்டியலில் கொல்கத்தா நோயாளிகளை காட்டிய Medall லேப்

sathya suganthi

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை அறிவித்தார் முதல்வர்

Tamil Mint

ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !!

Tamil Mint

பாரதிராஜாவுக்கு மீரா மிதுன் பதிலடி

Tamil Mint

அரசின் கொரானா விதிகளை காற்றில் பறக்கவிட்ட கமல்ஹாசன், செல்வமணி!

Tamil Mint

டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் – அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்

Tamil Mint