“ஊடகங்களை மிரட்டும் வகையில் நான் பேசவில்லை” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை


தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அண்மையில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நேற்று பதவியேற்றார் அண்ணாமலை.

இதற்காக கோவையில் இருந்து வாகன யாத்திரையாக வந்த அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்ட கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்த ஊடகங்களை நீங்கள் மறந்து விடுங்கள். நம்மை பற்றி பொய்யாக செய்தி போடுகிறார்கள். என்ன செய்யலாம் என்பதை எல்லாம் மறந்து விடுங்கள்.

Also Read  கன்னியாகுமரி: மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இன்னும் 6 மாதத்துக்குள் இந்த ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம்; கையில் எடுக்கலாம். அதை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். ஆகவே தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது.

முன்னாள் மாநில தலைவராக இருந்த எல். முருகன் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக உள்ளார். அனைத்து ஊடகங்களும் அவருக்கு கீழ் தான் வரப்போகின்றன ” என்று கூறினார்.

Also Read  நாளை அமித்ஷா வருகை: இன்று இபிஎஸ், ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

இதையடுத்து ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசுவதா? என அண்ணாமலையின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் கமலாலயத்தில் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர்கள் அண்ணாமலை, “ஊடகம் குறித்து நான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. நான் புதிய தொழில்நுட்ப விதிகள் குறித்து பேசினேன்.

Also Read  PSBB பள்ளிக்கு ஆதரவாக ட்வீட் செய்த சுப்பிரமணியன் சுவாமி…!

இந்த விதிகள் சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களுக்கு செக் ஆக அமையும். பாரம்பரிய ஊடகங்கள் பற்றி நான் சொல்லவில்லை.

தமிழக, இந்திய ஊடகங்கள் மீது பாஜக மிகப்பெரிய மதிப்பை வைத்துள்ளது. மேலும், பிரதமர் மோடி மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்” என விளக்கமளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

களத்தில் சீறிப்பாயும் காளைகள்… உற்சாகத்துடன் திமில் ஏறும் வீரர்கள்… கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Tamil Mint

“ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

நாகர்கோவில், மும்பை இடையே சிறப்பு ரயில்கள்

Tamil Mint

இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் : முதல்வர்

Tamil Mint

திமுக அரசை குறைகூறும் எண்ணம் இல்லை.. ஆனால்..! – தனித்து அறிக்கை விட்ட ஓ.பி.எஸ்.!

sathya suganthi

“சசிகலா அதிமுக கட்சியிலேயே இல்லை” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!

Lekha Shree

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் – உதயநிதி கமெண்ட்

Tamil Mint

“நான் தினமும் மாட்டு சிறு நீரை குடிக்கிறேன்” – பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

Shanmugapriya

1968-ல் ஒரு பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெளியான உணவக பில் இதோ!

Lekha Shree

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக…!

Lekha Shree

திமுகவுடன் இணைகிறாரா சசிகலா? – ஆர்.எஸ்.பாரதி பதில்

Tamil Mint

மக்களையும் காக்கவில்லை.. நதிகளையும் காக்கவில்லை.. மோடியை கடுமையாக விமர்சித்த கமல்..

Ramya Tamil