“பேருந்து கட்டணம் உயராது” – போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..!


தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை சதத்தை தொட்டுவிட்டது.

ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதத்தை நெருங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனை பொதுமக்களும் சில அரசியல் கட்சி பிரமுகர்களும் கண்டித்து வருகின்றனர்.

Also Read  சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

இதையடுத்து மக்களிடையே டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் அதிகரிக்க கூடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் வினவிய போது அமைச்சர் ராஜகண்ணப்பன், “டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை.

அரசு பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரை இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also Read  "ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை" - பள்ளிக்கல்வித்துறை

மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான இலவசப் பேருந்துகளுக்கு தனி வண்ணம் அடிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இலவச பயணம் என்றாலும் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதை கணக்கிட தனி டிக்கெட் வழங்கப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்து சேவை கொண்டுவரப்படும். கிராமப்புறங்களில் மினி பேருந்துகள் இயக்க கோரிக்கைகள் வருகின்றன” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்…!

Lekha Shree

மறுபடியும் “சுந்தரா டிராவல்ஸ்” ராதா…!மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்து கதறல்…!

sathya suganthi

நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

Tamil Mint

டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் – அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்

Tamil Mint

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

Lekha Shree

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

sathya suganthi

பெண்களின் இடுப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்…!

Devaraj

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி

Tamil Mint

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint

ஊரடங்கில் அடுத்த தளர்வுகள் என்னென்ன? – முழு விவரம் இதோ…!

sathya suganthi