தமிழகம்: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!


தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஜூலை 19ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைகிறது.

கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு இன்னும் பேருந்து போக்குவரத்து தொடங்காததால் அது பற்றி இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

திரையரங்குகள், மதுக்கூடங்கள் திறப்பது குறித்தும் பள்ளிகள் திறக்கும் சூழல் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சகாயம் ஐஏஎஸ்

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள் மற்றும் இதர கடைகள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

Also Read  கொரோனா பரவல் - ஊரடங்கு நீட்டிப்பு!

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கை கழுவும் திரவம் கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் 50% வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள் செயல்படுகிறதா என சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளின் வாயிலில் சானிடைசர் கட்டாயம் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கடைக்குள் நுழையும் முன் சனிடைசர் கொண்டு கைகழுவ வேண்டும்.

Also Read  பாலியல் வழக்கில் சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

கண்காணிப்பு குழுவின் ஆய்வின் போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் தொற்று நோய் சட்டம் 1897, பிரிவு 2-ன் கீழ் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு பதவி – அதிரடி காட்டும் தமிழக அரசு

sathya suganthi

குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்!

Tamil Mint

காவல்துறையில் உலா வரும் பல ‘ராஜேஷ் தாஸ்’கள்! தொடரும் அவலம்!

Lekha Shree

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி – ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

Lekha Shree

துரைமுருகன் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக நிர்வாகி! விசித்திர பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

Jaya Thilagan

போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

Tamil Mint

உடைகிறதா அதிமுக – பாஜக கூட்டணி? பாஜக போடும் பலே திட்டம் கை கொடுக்குமா?

sathya suganthi

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அதிமுக வசமாகும் கொங்கு மண்டலம்?

Lekha Shree

ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான முன்பதிவு தொடக்கம்…! என்ன விலை தெரியுமா?

Lekha Shree

சென்னை புறநகர் ரயில்கள் இரவில் இயங்காது

Jaya Thilagan

மே 2 முழு ஊரடங்கு…! வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பா…? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்…!

Devaraj

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint