அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி


தைப்பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர், “தைப்பொங்கலையொட்டி 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்கப்படும். ஜனவரி 4-ம் தேதி முதல் ரூ.2,500 வழங்கப்படும். 

Also Read  தமிழகத்தில் வெகுவாக குறைந்தது கொரோனா பாதிப்பு…!

வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு, அதற்கேற்ப நியாயவில்லை கடைகளில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்” என தெரிவித்தார். 

2020 தைப்பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read  "பார்வையாளன் டு பங்கேற்பாளன்!" - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி…!

தொடர்ந்து, பிரச்சார வாகனத்தில் நின்று பரப்புரை செய்த முதல்வர் பழனிசாமி, “எம்.ஜிஆர், ஜெயலலிதா கனவை அரசு நிறைவேற்றுகிறது. தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தை 31 ஆண்டுகள் அதிமுக அரசு ஆண்டுள்ளது. 

31 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். பல்வேறு சோதனைகளை கடந்து அதிமுக அரசு சிறப்பாக  செயல்பட்டு வருகிறது. மேலும் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது” என பெருமிதத்துடன் கூறினார். 

Also Read  திமுக ஐடி விங் இணைச் செயலாளராக மகேந்திரன் தேர்வாக காரணம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நட்சத்திர தொகுதிகள்: எங்கெங்கு எத்தனை சதவீத வாக்குப்பதிவு?

Devaraj

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint

முதலையை இழுக்கும் இளைஞர் – வைரல் ஆன வீடியோவால் சிக்கல்!

Tamil Mint

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறையினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Tamil Mint

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘விடியல் எப்போது ஸ்டாலின்’ ஹேஷ்டேக்…! காரணம் இதுதான்!

Lekha Shree

தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

suma lekha

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

கொரோனா பரவலை தடுக்க புதுக்கட்டுப்பாடுகள்…! இன்று அறிவிக்கிறது தமிழக அரசு…?

Devaraj

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு…! எவ்வளவு தெரியுமா?

sathya suganthi

சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு…!

sathya suganthi