a

தமிழகம்: மதுக்கடைகள் திறப்பு! கூடுதல் தளர்வுகள் என்னென்ன?


தமிழ்நாட்டில் வரும் 14 முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், அழகு நிலையங்கள், சலூன்கள் (AC இல்லாமல்) திறக்க 14ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஊர் அடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 14 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும்.

தனியார் பாதுகாப்பு, சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

Also Read  யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு கிடைத்த ஸ்பெஷல் கிப்ட்!

மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற தொழில் செய்பவர்கள் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் அனுமதி.

ஆனால், இவ்வகை கடைகள் திறக்க அனுமதி இல்லை.

மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் அனுமதி.

வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் பயணிகள் பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டாக்ஸியில் ஓட்டுனர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகளும் மட்டும் பயணிக்க அனுமதி.

Also Read  தமிழகத்தில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு? என்னென்ன கட்டுப்பாடுகள்?

வேளாண் உபகரணங்கள், பம்புசெட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.

கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் அனுமதி.

மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

இதரப் 27 மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகிறது.

அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமல் ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

Also Read  தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு!

அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் விளையாட்டு திடலில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடை பயிற்சிக்கு மட்டும் அனுமதி.

மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மென்பொருட்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதி.

செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி” என பல்வேறு கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!!

Tamil Mint

அதிமுக எம்எல்ஏ காதல் திருமணம்: பெண்ணின் தந்தையின் புகாரை நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது

Tamil Mint

நாயை கொடூரமாக கொன்ற நபர்கள்.. அதுவும் இந்த காரணத்திற்காக.?

Ramya Tamil

அதிரவைக்கும் லலிதா ஜூவல்லரி ஐ.டி.ரெய்டு… சேதாரம் என சொல்லி ரூ.1000 கோடியை ஆட்டையைப் போட்டது அம்பலம்…!

malar

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:

Tamil Mint

கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்: கே.பி.அன்பழகன்

Tamil Mint

சேலத்தில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா உறுதி! பள்ளி மூடப்பட்டது!

Tamil Mint

சென்னையில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய 10 பாஜகவினர் கைது

Tamil Mint

சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்

Tamil Mint

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

மெரினா கடற்கரையை திறப்பது குறித்து அரசு புது முடிவு, நீதிமன்றம் எச்சரிக்கை

Tamil Mint

குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைகிறது – தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!

Devaraj