a

இந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகலாம்.. ஏன் தெரியுமா..?


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில், ஒரு சில தொகுதிகளில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதமாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெரும்பாலும் கிட்டத்தட்ட பிற்பகலுக்குள் பெரும்பாலான முடிவுகள் தெரிந்துவிட்டன.

ஆனால், இந்த முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Also Read  தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

ஏனெனில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை வாக்கு எண்ணிக்கையில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிகளை பணியாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வழக்கமாக 20 சுற்றுக்குள் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை இந்த முறை சில தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

குறிப்பாக பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் 44 சுற்றுகளும், செங்கல்பட்டு தொகுதியில் 43 சுற்றுகளும் அம்பத்தூர் தொகுதியில் 39 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

Also Read  விஜயகாந்தை நாளை சந்திக்க உள்ளார் டிடிவி தினகரன்! - அரசியல் களத்தின் ஹாட் டாக்!

எனவே, இந்த 3 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளும் கிட்டத்தட்ட நள்ளிரவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஓசூர், பூந்தமல்லி தொகுதிகளில் 36 சுற்றுகள் எண்ணப்பட இருக்கின்றன.

இந்த தொகுதிகளின் இரவு 10 மணிக்கு மேல் தான் வெளியாகும் என்றும் தெரிகிறது. ஆனால், அதேநேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் 20 சுற்றுகளுக்கும் குறைவாகவே வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், அவற்றின் முடிவுகள் நாளை மாலைக்குள் வெளியாகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  தோல்விக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரசாந்த் கிஷோர்? கடுப்பில் காங்கிரஸ்!

எது எப்படியோ, எந்த கட்சி முன்னணியில் இருக்கிறது என்பது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனேயே தெரிந்துவிடும். எனவே தமிழகத்தில் ஆட்சியமைக்க போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த இந்து எழுச்சி முன்னணியினர்!

Tamil Mint

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்…!

Devaraj

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்; அசத்திய கோவை தம்பதி!

Shanmugapriya

கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்: கே.பி.அன்பழகன்

Tamil Mint

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறதா?

Tamil Mint

அதிமுக–தேமுதிக இடையே தொகுதி பங்கீடு… இன்று கையெழுத்தாகும் ஒப்பந்தம்?

Lekha Shree

தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனாவிற்கு பலி.!

Tamil Mint

21 வயது ஆன ஆர்ய ராஜேந்திரன், கேரள தலைநகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

20 இடங்களிலும் வெல்வோம்: எல்.முருகன் நம்பிக்கை

Devaraj

“ உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்..” ஏ.ஆர் . ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில்

Ramya Tamil