a

தமிழகத்தில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு? என்னென்ன கட்டுப்பாடுகள்?


தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,000-ஐ கடந்துள்ள நிலையில், தமிழக அரசு நிலைமையை கட்டுக்குள் வைக்க புதிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாகவும் இன்று மாலை அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Also Read  தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக ஆக்சிஜன் பற்றாக்குறை உருவெடுத்துள்ளது. அதனால், தமிழகத்தில் புதிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Also Read  கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது! வெளியான அதிர்ச்சி தகவல்!

முதல்வர் பழனிசாமியுடன் இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனையின் முடிவில் புதிய கட்டுப்பாடுகள் இன்றே அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு ஊரடங்காக இல்லாமல் பணி நேரம் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை குறைப்பு போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். கொரோனா பரவலை தடுக்க கூட்டம் அதிகமாக உள்ள வாரச்சந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கு; மீறினால் வாகனம் பறிமுதல்

வீட்டிலிருந்தே பணிபுரிவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்படலாம். மத வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சகாயம் ஐஏஎஸ்

Tamil Mint

சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

Tamil Mint

டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்: தமிழக அரசு

Tamil Mint

“ உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்..” ஏ.ஆர் . ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில்

Ramya Tamil

சசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன?

Tamil Mint

மழையால் ஏற்பட்ட பாதிப்பு !!! மத்திய குழுவினர் ஆய்வு…

Tamil Mint

ஆட்சியரின் ஆய்வுக் கூட்டத்தில் இந்தி திணிப்பா? புதுக்கோட்டையில் பரபரப்பு

Tamil Mint

படு ஜோராக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறும் காளைகளை அடக்கும் வீரர்கள்!

Tamil Mint

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு வாய்ப்பு – சென்னையில் வரும் 19-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

Tamil Mint

“ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் எடப்பாடி” – மு.க.ஸ்டாலின்

Shanmugapriya

கொரோனா தொற்றால் காலமான தயாரிப்பாளர்

Tamil Mint