a

முழு ஊரடங்கு : அதிகவிலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு


கொரோனா தொற்றின் 2-வது அலை அதிவேகமாக பரவிவரும் நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால் நேற்றும் இன்றும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் - வானிலை மையம்

இதனால், ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

Also Read  தமிழக அரசு பள்ளிகளில் அட்மிஷன் தொடங்கியது

இதையடுத்து, காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், காய்கறிகளை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் - அரசு குழுவின் முதல் பதிவு

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

12-வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு..? அரசு தேர்வுத்துறை விளக்கம்..

Ramya Tamil

இன்றைய தலைப்புச் செய்திகள் | 19.5.2020

sathya suganthi

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் இயக்கம்

Tamil Mint

தமிழக வாக்காளர் பட்டியலை ரத்து செய்ய கோரி மனு! இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என புகார்!

Tamil Mint

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் ஆகிறதா மதுரை? அமைச்சரின் அதிரடி கோரிக்கை!

Tamil Mint

“எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவது உறுதி” – அண்ணாமலை திட்டவட்டம்!

Lekha Shree

இ-பாஸ் தொடர வேண்டும்: முதல்வர் திட்டவட்டம்

Tamil Mint

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம்: சி.பி.ஐ

Tamil Mint

ஐஜி பொன் மாணிக்கவேல் மருத்துவமனையில் அனுமதி.

Tamil Mint

ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்..

Ramya Tamil

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

மனதில் உள்ளதை அனுப்புங்கள் – தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன்

sathya suganthi