a

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – கடுமையான கட்டுப்பாடுகள் என்னென்ன?


தமிழகத்தில் மேலும் 1 வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டத்தில் ஊரடங்கை நீடிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவளித்தனர். அதைத்தொடர்ந்து 1 வார காலத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலப்டுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனால், நாளை ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டங்களின் முடிவில் மேலும் 1 வாரம் தமிழகத்தில் கடுமையான தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

கட்டுப்பாடுகள் என்னென்ன?

மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் செயல்பட அனுமதி.

Also Read  சட்டமன்ற தேர்தல் ஆடு-புலி ஆட்டம்; முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்?

பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி.

பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்.

தனியார் நிறுவனங்கள் வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணி புரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்.

மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணிமுதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.

Also Read  மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

Swiggy, Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும். ஏடிஎம்கள் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவை இல்லை.

Also Read  பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் - மு.க.ஸ்டாலின்

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கலாம்.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணிவரையிலும் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மால்கள் திறக்க அனுமதி கிடையாது.

வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அமமுக பற்றி கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Lekha Shree

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!

Tamil Mint

ஸ்டாலினை எதிர்க்கும், ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற திருநங்கை…!

Lekha Shree

சேலத்தில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா உறுதி! பள்ளி மூடப்பட்டது!

Tamil Mint

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? சலசலப்பு ஏற்பட்ட நிலையில் மூத்த அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ். திடீர் ஆலோசனை!

Tamil Mint

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

Tamil Mint

கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

இசையமைப்பாளர் இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வைகோ இரங்கல்

Tamil Mint

அரசு அலுவலகத்தில் மருத்துவர் ராமதாஸ் புகைப்படம் சர்ச்சை கிளப்பியுள்ளது

Tamil Mint

பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை

Tamil Mint