தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு…! எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை?


இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் தொற்றின் பரவலும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் வினியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை போன்றவை இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read  தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்? நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…!

இன்று முழு உரடங்கின் போது உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும் எனவும் உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேல் சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதர மின் வணிகங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரி மகன் மரணம்...!

வழிபாடு தளங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. திருமணம் போன்ற நிகழ்வுகள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 100 பேருக்கு மிகாமல் திருமணத்தை நடத்திக் கொள்ள வேண்டும்.

திருமணத்திற்கு செல்வோர் பத்திரிகைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்...!

இதேபோல் நேர்முகத்தேர்வு செல்பவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #boycottzomato மற்றும் #Reject_Zomato …! என்ன காரணம்?

Lekha Shree

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் – மக்கள் அச்சம்!

Shanmugapriya

மிகப்பெரிய திட்டம் ஒன்றினை கொண்டு வரப் போகிறோம்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆருடம்.

mani maran

என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரை கடத்தி ரூ. 2 கோடி பணம் கொள்ளை பயங்கரவாதிக்கு போலீஸ் வலை

Tamil Mint

பாடப் புத்தகத்தில் கருணாநிதி பெயரை நீக்க ரூ.23 கோடி செலவு!

sathya suganthi

வரிசையாக ஓடிடிக்கு செல்லும் படங்கள்… அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்..!

Lekha Shree

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் – மத்திய அரசு

Tamil Mint

அனுமன் ஜெயந்தி – நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை!

Lekha Shree

24 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

sathya suganthi

ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

Lekha Shree

கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj