தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதி ஜனவரி 31 வரை நீட்டிப்பு!


தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதி ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 4ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் 2022ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி ஜனவரி 4ம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Also Read  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய முகாம்

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லிதூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கோதுமை மாவு, ரவை, உப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதி ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also Read  முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்…!

மேலும், “ஜனவரி 9ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் மக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் தேதியில் பொங்கல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட நாளில் பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

Also Read  ”தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை” - சென்னை உயர்நீதிமன்றம்..!

தவிர்க்க முடியாத காரணத்தால் பொங்கல் பரிசை பெற இயலாதவர்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்” என தமிழக அரசு அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Tamil Mint

“ஆணவப்படுகொலையை முற்றாக ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்!” – சீமான் வலியுறுத்தல்..!

Lekha Shree

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!

Lekha Shree

அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

Tamil Mint

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுவே முதல்முறை… அப்படி என்ன நடக்க போகிறது?

suma lekha

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Tamil Mint

பெண்களும் அர்ச்சகராகலாம்…! – அமைச்சர் சேகர் பாபு!

Lekha Shree

மகனை அடித்து துன்புறுத்தியது ஏன்? கைதான துளசி பரபரப்பு வாக்குமூலம்!

Lekha Shree

சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தல்…!

Lekha Shree

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப்பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..!

Lekha Shree

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

தமிழக அரசு மீது ராமதாஸ் கடும் தாக்கு

Tamil Mint