பேய் பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்..! கடலூரில் பரபரப்பு..!


கடலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் பேய் பயத்தால் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கடலூர் ஆயுதப்படை போலீசில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். பிரபாகரன் தனது குடும்பத்துடன் கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

திங்கட்கிழமை அன்று மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி விஷ்ணுபிரியாவையும் இரண்டு குழந்தைகளையும் அனுப்பி வைத்தவிட்டு, பிரபாகரன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

Also Read  மீண்டும் 13 பயணிகளுடன் மாயமான ரஷ்ய விமானம்…!

விஷ்ணுபிரியா திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பிரபாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் பிரபாகரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பிரபாகரனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்றும் அரசல் புரசலாக கூறப்பட்டுள்ளது.

அப்போது இதுகுறித்து விசாரித்ததில், பிரபாகரன் கனவில் தீயில் எரிந்த பெண் ஒருவர் கருகருவென கோரமான முகத்துடன் வந்து தன்னை போட்டு அமுக்குவதாகவும் கழுத்தை நெரிப்பதாகவும் பிரபாகரன் கூறி வந்துள்ளாராம்.

இதனால் தனக்கு பேய் பிடித்து இருக்கலாம் என்று நினைத்த அவர் அதற்காக குறி சொல்பவர்களைப் பார்த்து முனீஸ்வரன் கோவிலுக்கு சென்று தாயத்து கயிற்றை கையில் அணிந்துள்ளார்.

Also Read  ஊரக உள்ளாட்சித் தேர்தல்... வாக்குப்பதிவு தீவிரம்..!

மேலும், பணிக்கு செல்ல பயந்து 15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டின் பூஜை அறையிலேயே இருந்துள்ளார்.

ஓரளவு பயம் நீங்கியதால் விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய பொது பிரபாகரனுக்கு மீண்டும் கனவில் அந்த பெண் வந்ததாக கூறியுள்ளார்.

இதனால், அந்தப் பெண்ணுக்கு பயந்த பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  களத்தில் சீறிப்பாயும் காளைகள்... உற்சாகத்துடன் திமில் ஏறும் வீரர்கள்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மேலும், பிரபாகரனின் மரணத்துக்கு பணிச்சுமையும் அதிகாரிகளின் அழுத்தமும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை எனக் சக போலீசார் கூறியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே காவலர் குடியிருப்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் பேயாக வந்து தனக்கு மரணபயத்தைக் காட்டுவதாக பிரபாகரன் சக போலீசாரிடம் கூறியுள்ளார்.

அதனால் பிரபாகரன் உயிரை மாய்த்துக் கொண்டு இருப்பது அவரது குடும்பத்தை மட்டுமில்லாமல் கடலூர் காவல் குடியிருப்பில் உள்ள மற்ற போலீசாரின் குடும்பத்தினரையும் கதிகலங்க வைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: தலைநகரை குளிர்வித்த மழை…! மக்கள் மகிழ்ச்சி..!

Lekha Shree

தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

“ஜெயலலிதாவை போல் செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின்!” – செல்லூர் ராஜு புகழாரம்..!

Lekha Shree

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தேர்தல் பிரச்சாரம் காரணமா?

Devaraj

வெற்றியை வேறு மாதிரி கொண்டாடிய உதயநிதி! ஸ்டாலினுக்கு கொடுத்த சூப்பர் கிப்ட்!

Lekha Shree

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப.வீரபாண்டியன் நியமனம்…!

Lekha Shree

நெல்லையில் வெடிகுண்டு வீசி இருவர் படுகொலை

Tamil Mint

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு – தி.மு.க. எம்.பி. ரமேஷை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்?

Lekha Shree

தமிழக அரசு மீது ராமதாஸ் கடும் தாக்கு

Tamil Mint

உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint