‘கேஜிஎப் 2’ – தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது எந்த நிறுவனம் தெரியுமா?


கேஜிஎப் 2 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது .

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட ஹீரோ யாஷ் நடிப்பில் 2018ல் வெளியான படம் கேஜிஎப்.

இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றிவாகை சூடியது.

பாகுபலி படத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்திற்காக மக்கள் காத்திருக்கும் படம் ‘கேஜிஎப்’. “10 பேரை அடித்து டான் ஆனவன் இல்லடா நான் அடிச்ச 10 பேருமே டான் தான்” போன்ற பன்ச் டயலாக்குகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வரும் அம்மா செண்டிமெண்ட் பாடலும் பலரது ரிங்டோனாக மாறியது.

Also Read  கடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……

கன்னட சினிமா சரித்திரத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வசூலை குவித்த படம் இந்த படம். இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

தற்போது கேஜிஎப் சாப்டர் 2 தயாராகிவிட்டது. இதில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்கள், நடிகர் பிரகாஷ்ராஜூம் இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

Also Read  உலகநாயகனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…! வெளியான சூப்பர் அப்டேட்!

யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் இப்படத்தின் டீஸர் வெளியாகி 200 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்றுள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது .

Also Read  மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி? ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு..!

எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருவன், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, ராட்சசி, கைதி, சுல்தான் உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூலா? பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’!

Tamil Mint

நடிகர் சோனு சூட்டுக்கு கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

பிக்பாஸ் 5வது சீசன் எப்போது ஆரம்பமாகும்?

Lekha Shree

இந்தி மார்க்கெட்டிற்கு குறி வைத்த விஷால்… பாலிவுட்டில் வெளியாகும் ‘சக்ரா’…!

Tamil Mint

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை புகழ்ந்த டோலிவுட் முன்னணி ஹீரோ!!!

Lekha Shree

“தாமரை டேஷ்லயும் மலராது”: ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…!

Tamil Mint

சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பாலிவுட் பிரபலம்…! ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவின் புதிய பாடல் – வயது மீறிய உறவுக்கு ஊக்குவிப்பதாக புகார்

sathya suganthi

இன்று வெளியாகிறது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

Lekha Shree

தளபதி 65 திரைப்பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree