a

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு


தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன.அவற்றின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.

கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்களை வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ‘தமிழ் நிலம்’ மென்பொருளோடு ஒப்பீடு செய்து முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் பகுதி அளவு ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் முதல்கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் ‘அ’ பதிவேடு நகர நில அளவை பதிவேடு சிட்டா போன்றவை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

Also Read  ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மொத்தம் உள்ள கோவில் நிலங்களில் 72 சதவீதம், அதாவது மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில் முதல் கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த இணையதளத்தில் ‘திருக்கோவில் நிலங்கள்’ என்ற தலைப்பை தேர்வு செய்து அதன்பின் பட்டியலிட்டுள்ள கோவிலை தேர்வு செய்ததும் கோவில்களுக்கு சொந்தமான முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் திரையில் தோன்றும்.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 02.06.2021

அதன் விவரங்களை பார்வையிடலாம்; பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி : ரகோத்தமன் கொரோனாவால் பலி…!

sathya suganthi

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்

Devaraj

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

Tamil Mint

பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் உடல் நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் பதில்

Tamil Mint

சாலை விதியை மீறியதால் பாலத்தில் சிக்கிய வாகனம்: நெடுஞ்சாலைத்துறை

Tamil Mint

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி!

Lekha Shree

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு: சொல்கிறார் ஆர்.எஸ். பாரதி

Tamil Mint

கொரோனா வார்டுக்கு கவச உடையில் சென்ற கனிமொழி எம்.பி…!

sathya suganthi

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – முழு விவரம் இதோ…!

sathya suganthi