முகப்பருவை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..! முழு விவரம் உள்ளே..!


முகத்தில் இருக்கும் முகப்பரு நீங்க நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் ஒரு பொருள் போதும். அதுதான் வெங்காயத் தோல்.

வெங்காயத் தோலை முகப்பரு நீங்க எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

ஆனியன் பீல் ஃபேஸ் மாஸ்க்:

ஒரு கப் அளவு வெங்காயத் தோலை எடுத்து பிளண்டரில் அதை போட்டு நன்கு அரைக்க வேண்டும்.

பின்பு அதில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து ஒரு தடிமனான பேஸ்ட் ஆனதும் அதை கண்களைத் தவிர்த்து முகத்தில் பிற பகுதிகளில் சமமாக தடவவேண்டும்.

சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் ஃபேஸ் பேக்கை உலரவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வர முகப்பருக்கள் கட்டாயம் நீங்கும்.

Also Read  காலையில் சாப்பிடக்கூடாத 6 உணவு வகைகள்...!

வெங்காயத்தை தோல் மற்றும் வெள்ளரி ஃபேஸ் பேக்:

வெங்காயத் தோல்கள் தண்ணீரில் 5 அல்லது 7 நிமிடங்கள் வேக வைக்கவும். அதேபோல் வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, 2 தேக்கரண்டி வெங்காய தோல் சாறு சேர்க்கவும்.

அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலரவிட்டு பின்பு தண்ணீரில் முகத்தை கழுவவும்.

வெங்காயத் தோல் மற்றும் பேரிக்காய் ஃபேஸ் பேக்:

சிறிதளவு வெங்காயத் தோல்களை சூடான நீரில் வேக வைத்துக் கொள்ளவேண்டும். அதேபோல் பேரிக்காயும் அரைத்து பேஸ்டாக வைத்துக் கொள்ளவேண்டும்.

பின்னர், கிண்ணத்தை எடுத்து அதில் பேரிக்காய் பேஸ்ட் சிறிதளவு சேர்த்து அதனுடன் மூன்று தேக்கரண்டி பால் மற்றும் 3 தேக்கரண்டி வேக வைத்த வெங்காய தோல் தண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Also Read  குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்…! இது உங்களுக்கான செய்தி…!

அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதனை ஐந்து நிமிடங்கள் உலர வைத்து விட்டு பின்பு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இது முகப்பருக்களின் அடையாளங்களை கட்டாயம் அகற்றும்.

வெங்காயத் தோல் மற்றும் முட்டை ஃபேஸ் மாஸ்க்:

ஒரு பிளண்டரில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கால் கப் வெங்காயத் தோலை சேர்க்கவும்.

அதனுடன் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் கேரட் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை முகத்தில் 10 நிமிடங்கள் உலரவிட்டு பின்பு முகத்தை கழுவ வேண்டும்.

வெங்காய தோல் ஸ்க்ரப்:

Also Read  கோடை காலத்திற்கு உகந்த பழங்களின் லிஸ்ட் இதோ..!

முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்க வெங்காயத் தோலை பயன்படுத்தலாம். 2 தேக்கரண்டி ஓட்ஸ்-ஐ தண்ணீரில் வேக வைத்துக்கொள்ளவும்.

அதேபோல் ஒரு தனி பாத்திரத்தில் வெங்காயத் தோலை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அது குளிர்ச்சியான பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து ஓட்ஸ் மற்றும் இரண்டு மூன்று தேக்கரண்டி வெங்காய தோல் சாறு சேர்க்கவும்.

அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கிய பிறகு அதனை தோலில் தடவவும். முகத்தில் அதை தடவும் போது கிளாக் வைசாக முகத்தில் வட்ட இயக்கத்தில் ஸ்கிரப் செய்ய வேண்டும்.

சிறிது நேரம் உலரவிட்டு பின் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் அலோவேரா ஜெல் போன்ற ஏதேனும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி கொள்ளலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாவல்பழ விதைகளால் இவ்வளவு நன்மைகளா?

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 வகையான நெல்லி ஜூஸ்…! முழு விவரம் உள்ளே..!

Lekha Shree

இந்த கீரையில் இவ்வளவு நன்மைகளா…..

Devaraj

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க 5 சூப்பர் டிப்ஸ்!

Lekha Shree

கோடை காலத்தில் கேசத்தை பராமரிக்க உதவும் 4 வகை எண்ணெய்கள்…!

Lekha Shree

உங்களுக்கு கை, கால் வலி ஏற்படுகிறதா???… இந்த உணவுகளை உண்டால் எலும்பு பிரச்சனை வராது…..

VIGNESH PERUMAL

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியா? – இந்த எளிய டிப்ஸ்-ஐ ட்ரை பண்ணுங்க..!

Lekha Shree

“கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்” – தமிழக சுகாதாரத்துறை

Lekha Shree

குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்…! இது உங்களுக்கான செய்தி…!

sathya suganthi

வேர்க்குரு பிரச்சனைக்கு எளிய தீர்வுகள் இதோ…!

Lekha Shree

உடல் உஷ்ணம் குறைய சிறந்த உணவுப்பொருள் எது தெரியுமா?

Lekha Shree

தொட்டாற்சுருங்கி இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா?

Lekha Shree