இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!


முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்..!

சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காவது முறையாக தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மழை வெள்ளப்பாதிப்பு, நிவாரண நிதி அறிவிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  "நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை" - ஹெச்.ராஜா விளக்கம்..!

தமிழகம்: 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு: வாரம்தோறும் 2 மெகா தடுப்பூசி முகாம்கள்..!

தமிழ்நாட்டில் இனி வாரந்தோறும் 2 மெகா தடுப்பூ முகாம்கள் நடைபெறும் என்றும் தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கு திங்கட்கிழமை அன்று விடுப்பு அளிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Also Read  மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

டெல்லி: கடுமையான காற்று மாசு… பள்ளி, கல்லூரிகள் மூடல்..!

டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டின் வெளியே, 5 ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

Also Read  கொரோனாவால் குவியும் சடலங்கள்...! இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தாமதம்!

இந்தியா-நியூசிலாந்து டி20 போட்டி – இன்று தொடக்கம்..!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் – உச்சநீதிமன்றம் அதிரடி!

Tamil Mint

சிங்கக்குட்டிகளுக்கு ஆலோசனை கொடுக்க வந்த சிங்கம்.! : இந்திய அணியுடன் இணைந்த தோனி..

mani maran

டேராடூன் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா ரகசியமாக தப்பி ஓட்டம்…!

sathya suganthi

கூட்டணி தான் ம.நீ.ம. தோல்விக்கு காரணம்…! பொன்ராஜ் விளக்கம்

sathya suganthi

கர்நாடகாவில் பிரபலமடையும் மொபைல் சலூன் கடை!

Shanmugapriya

லீக்கான அர்னாப்பின் வாட்ஸ்-அப் உரையாடல்… சிக்கலில் அர்னாப்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Tamil Mint

கொரோனா வைரசுக்கு எமனாக வரும் “நானோ முகக்கவசம்” – வியக்கவைக்கும் தகவல்கள்…!

Devaraj

என் தற்கொலைக்கு அவர்தான் காரணம்! – முதல்வருக்கு மீராமிதுன் கடிதம்

Shanmugapriya

மைதானத்தில் தனது காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர்.!

suma lekha

புதிய கார் வாங்கிய KPY சரத்… வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்…!

suma lekha

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 261 சிறப்பு ரயில்கள்.!

suma lekha

மயிலாப்பூர்: 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்ததால், அச்சத்தில் மக்கள்!

Tamil Mint