இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!


தமிழகம்: கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள், திரையரங்குகள், மக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  கான்பூர் டெஸ்ட்: நியூசிலாந்தை கலங்கடிக்கும் இந்திய அணி.!

“முறையாக 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்!” – தமிழக முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் முறையாக 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்றும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read  வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!

தொடர் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் குறைந்த பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா அறிவித்துள்ளார்.

கொரோனா 5-ம் அலை – ஆஸ்திரியாவில் ஊரடங்கு..!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் கொரோனா ஐந்தாம் அலை பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் வரும் திங்கள்கிழமை முதல் 10 நாட்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர்.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 31.05.2021

இந்தியா-நியூசிலாந்து டி20 போட்டி – இந்தியா அபார வெற்றி..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 2-வது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகனாக ஹர்ஷல் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இனி 8 போடாமலேயே டிரைவிங் லைசென்ஸ்…! எப்படி தெரியுமா?

sathya suganthi

பாஜகவில் இணையும் மு.க. அழகிரி? – சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு..!

Lekha Shree

தமிழக தேர்தல் முடிவுகள்.. எந்தெந்த அமைச்சர்கள் முன்னிலை..? யாரெல்லாம் பின்னடைவு..?

Ramya Tamil

அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்?

Lekha Shree

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு..! பழனியில் பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று?

Lekha Shree

குழந்தை உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோவுக்கு ரூ.50,000 சன்மானம்

Jaya Thilagan

பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

HariHara Suthan

ரகுராம் ராஜன்…! நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்…!மு.க.ஸ்டாலினுக்காக சூப்பர் நிபுணர் குழு…!

sathya suganthi

கொரோனா வைரசின் புது வரவு…! வேகமாக பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த வைரஸ்…!

Devaraj

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.!

suma lekha