இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!


வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வைகை அணை திறப்பு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ,ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read  9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி.

தமிழகம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  திமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி மாற்றம்? – கொலிஜியம் பரிந்துரை..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

நவம்பர் 29-ம் தேதி முதல் நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி!

விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நினைவாக, நவம்பர் 29-ம் தேதி முதல் நாடாளுமன்றத்தை நோக்கி, 500 விவசாயிகள் அமைதியான முறையில் டிராக்டர் பேரணியில் ஈடுபடவுள்ளதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது.

Also Read  3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுரை!!!

மணம் முடித்தார் மலாலா…!

நோபல் பரிசு பெற்றவரும், பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மலாலா யூசுப்சாய், அஸர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இது தனது வாழ்க்கையில் பொன்னான நாள் என்றும் அனைவரும் வாழ்த்துங்கள் என்றும் ட்வீட் செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அபாயகரமான கொரோனா வகை…! 174 மாவட்டங்களில் கண்டுபிடிப்பு…!

sathya suganthi

மம்மிக்குள் என்ன இருக்கும்? சிடி ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள்…!

sathya suganthi

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

உணவுப் பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க முடிவு! எங்கு தெரியுமா?

Lekha Shree

இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு டிக்கெட் பெறலாம் – ரயில்வே நிர்வாகம்

Tamil Mint

“கொரோனா 3வது அலையில் இருந்து தப்பிக்க கைலாசா வாருங்கள்” – நித்தியானந்தா

Lekha Shree

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தொடங்கும் அன்னதானம்!

Lekha Shree

தமிழகம்: பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் டிக்கெட் விநியோகம்…!

Lekha Shree

மிகப்பெரிய திட்டம் ஒன்றினை கொண்டு வரப் போகிறோம்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆருடம்.

mani maran

கரூர்: எம்.பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

Lekha Shree

“நதிகளில் சடலங்கள் மிதந்த மாநிலம் சிறந்த மாநிலமா?” – மம்தா பானர்ஜி

Lekha Shree