இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!


தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்..!

தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் 20வது மாநகராட்சியாக உதயமாகியுள்ளது தாம்பரம்.

தமிழகம்: நாளை நடைபெறவிருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மற்றம்..!

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம், வரும் 14-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Also Read  முக்கிய அமைச்சர், அதிமுக எம்.பி.க்கு கொரோனா - பீதியில் அதிமுக…!

சென்னை: அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு அளவு..!

சென்னையில் நேற்று அதிகளவில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அளவு 800-ஐ கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ள ஒவ்வொருவரும் 45 சிகரெட் புகைத்த அளவிற்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!

ஐரோப்பாவில் மேலும் 5 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்க வாய்ப்பு! – உலக சுகாதார அமைப்பு

2022 பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் மேலும் 5 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு அங்கு வழங்கப்பட்டுள்ள அதிக தளர்வுகளை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை – மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேற்றம்..!

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியுள்ளது. 20 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இலங்கை.

Also Read  இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் பிராவோ..!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ. பேட்டிங், பவுலிங் என மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக 18 ஆண்டுகள் விளையாடியுள்ளார் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

Tamil Mint

தமிழக பாஜகவின் இன்னும் ஒரு மூத்த தலைவருக்கு கொரோனா தோற்று

Tamil Mint

பேய் நாயுடன் விளையாடிய நாய்!!! வைரலாகும் வீடியோ….

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி – நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை..!

Lekha Shree

சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…!

sathya suganthi

ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா; உறுதிப்படுத்திய ராஜா செந்தூர் பாண்டியன்

Tamil Mint

வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

Tamil Mint

வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

Devaraj

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 10,448 பேர் பாதிப்பு…!

Lekha Shree

பப்ஜி மதன்… பிட்காயின்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி…!

sathya suganthi

“நிலக்கரி காணவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு..!

Lekha Shree