இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!


சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பொறுப்பேற்றார் முனீஸ்வர்நாத் பண்டாரி!

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இன்று பதவியேற்றார் முனீஸ்வர்நாத் பண்டாரி. அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கனமழை எதிரொலி: ரயில் சேவைகள் ரத்து..!

ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு எதிரொலியாக சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் மண் சரிந்ததால் நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில் சேவைகள் முடங்கின.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 24.05.2021

சென்னை மழை சேதங்கள்: மத்திய குழு ஆய்வு..!

சென்னை புளியந்தோப்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டனர். 2 குழுக்களாக பிரிந்து சென்னையிலும் கன்னியாகுமரியிலும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

திருச்சி: காவலர் பூமிநாதன் கொலை வழக்கு – 4 பேர் கைது..!

திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கு: 4 பேரை கைது செய்தனர் தனிப்படை போலீசார். கைது செய்யப்பட்டவர்களின் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் – ‘மாநாடு’ தயாரிப்பாளர் கருத்து..!

‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Also Read  அறந்தாங்கி நிஷாவின் அழகிய குழந்தை.. கியூட் வீடியோ இணையத்தில் வைரல்..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகன் விருது அக்ஷர் பட்டேலுக்கு வழங்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

Tamil Mint

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

காலையில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் – மாலையில் தென் ஆப்பிரிக்காவை பொளந்து கட்டிய பாபர் ஆசாம்!

Lekha Shree

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

ரோல்ஸ் ராயஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்திய நடிகர் விஜய்..!

suma lekha

இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்!

Jaya Thilagan

ஆளுநர் உரை : தமிழகத்துக்கு குட் நியூஸ்…! இந்தியாவுக்கு பேட்நியூஸ்…!

sathya suganthi

சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ‘ரெட் கார்ட்’ நீக்கம்! – மீண்டும் தொடங்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு..!

Lekha Shree

அகில இந்து சமய மாடாதி தூக்கிட்டு தற்கொலை… உ.பி.,யில் பரபரப்பு..!

suma lekha

மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!

sathya suganthi

கமல் பிறந்தநாளில் தலைமுடியை தானம் செய்த ரசிகர்..!

suma lekha

செப்.15க்குள் உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi