“ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம்!” – ஒலிம்பிக் போட்டி தலைவர்


கொரோனா வைரஸ் பரவலால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஒலிம்பிக் போட்டி தலைவர் டொஷிரோ மூட்டோ தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பிரபலமான ஒலிம்பிக் போட்டி தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்தும் வீரர்களும் வீராங்கனைகளும் ஜப்பான் சென்றுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 33 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் 11,500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியில் மொத்தம் 339 பதக்கங்கள் வழங்கப்படும்.

Also Read  ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு முன்பு தொற்றுக்கு ஆளானவர்களை சேர்த்து மொத்தம் 68 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தலைவர் டொஷிரோ மூட்டோ, “வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Also Read  தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை…!

நாங்கள் தொற்று எண்ணிக்கையை உற்று கவனித்து வருகிறோம். எண்ணிக்கை அதிகரித்தால் அது குறித்து ஆலோசனை நடத்தி என்ன செய்யலாம் என்பது பற்றி நாங்கள் விவாதிப்போம்.

கடைசி நேரத்தில் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

Also Read  ஊரடங்கில் மேலும் தளர்வுகள்? - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

121 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு!

Lekha Shree

சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

HariHara Suthan

நியூசிலாந்திடம் மூன்று நாட்களுக்குள் இந்தியா தோல்வியை தழுவிய போது ஆடுகளத்தை குறித்து யாருமே வாய் திறக்காதது ஏன் – இந்திய அணி கேப்டன் விராட் கோலி சரமாரி கேள்வி

Jaya Thilagan

ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் திடீர் விலகல்…! காரணம் இதுதான்…!

Devaraj

இந்தியா எப்போதுமே கெத்து தான் – கோப்பையை வென்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணி

HariHara Suthan

இனவெறி சீண்டலால் சீறிய விராட் கோலி… என்னா ‘ரவுடித்தனம்’?

Tamil Mint

6 வீரர்களுக்கு கொரோனா – 6-வது பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் நிறுத்தம்!

Lekha Shree

வெற்றிக்கு காரணமான சிறுவன்…! டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…!

sathya suganthi

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிகள்..!

Lekha Shree

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

Lekha Shree