a

இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! – அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!


இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் மணிரத்தினம் குறித்த சில சுவாரசியத் தகவல்களை காணலாம்.

மணிரத்தினம் சென்னைகாரர் என்று பலர் நினைப்பர். ஆனால், அவர் மதுரைக்காரர்.

தன்னை யார் இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் பெரிதாக ரியாக்ஷன் காட்டமாட்டார். கதை விவாதத்துக்கு எப்போதும் துணை சேர்க்கவே மாட்டார் எல்லாமே அவரது எண்ணங்கள் தான்.

உலகின் 100 சிறந்த படங்களில் ஒன்றாக நாயகன் படத்தை டைம்ஸ் பத்திரிகை தேர்வு செய்தது. இந்த மிகப்பெரிய கவுரவத்தை கொண்டாட விழா எடுக்க நினைத்த போது அதை தடுத்து விட்டாராம் மணிரத்னம்.

Also Read  'விக்ரம்' படத்தில் பகத் பாசிலுக்கு என்ன ரோல் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள், உறவினர்கள் என அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி விருந்து அளிப்பார்.

கைகடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால் கடிகாரத்தை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த நேரம் அறிய விரும்பும் போது பார்ப்பாராம்!

முழு ஸ்கிரிப்டையும் பென்சிலில் தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தன் படம் ரிலீசாகும் தினத்தன்று நிதானமாக அறைக்குள் அடுத்த படத்தின் வேலையை தொடங்கி விடுவார்.

நல்ல படமாகவும் இருக்க வேண்டும் அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்த விதத்தில் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தை தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்!

Also Read  நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் 'மண்டேலா' திரைப்படம்!

படத்துக்கு பூஜை, கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டுவது, பூசணிக்காயை உடைப்பது, ராகுகாலம் எமகண்டம் இப்படி எதையும் பார்க்க மாட்டாராம் மணிரத்னம்.

தன்னிடம் இருந்து எந்த உதவியாளர் வெளியே வாய்ப்பு தேடி போனாலும், அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து வாய்ப்பு கிடைக்கும்வரை பயன்படுத்திக்கொள்ள சொல்வாராம்.

அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து ‘எனக்கு பெண் குழந்தை பிடிக்கும்’ என சொல்லும் சீன் இருக்கும்!

Also Read  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபஹத் ஃபாசில்!!அதிர்ச்சியில் ரசிகர்கள்..

மணிரத்தினம் தளபதி படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். மணிரத்னம் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது இருவர்.

நடிகர்களிடம் இப்படித்தான் நடிக்கவேண்டும் என்று நடித்து காட்டமாட்டார். அவர்களை நடிக்க வைத்து தேவையான திருத்தங்களை மட்டும் சொல்வாராம்.

மணிரத்னத்தின் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம் பெறும். தனிமை விரும்பி. இவரின் மானசீக குரு அகிரா குரோசோவா. அவரது படங்களை திரையிட்டு காண்பதை அதிகம் விரும்புவாராம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

Meeting between theatre owners, producers begin

Tamil Mint

மற்றுமொரு நட்சத்திர குழந்தையான ஷானயா கபூரை அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோகர்..!

HariHara Suthan

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை… ஆறுதல் கூறிய புகழ்!

HariHara Suthan

பிரான்ஸிலிருந்து ஆக்சிஜன் ஆலைகளை இறக்குமதி செய்ய சோனு சூட் முடிவு!

Shanmugapriya

‘அந்தாதூன்’தமிழ் ரீமேக் ஷூட்டிங் ஆரம்பம்… முதல் நாளே இயக்குநர் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…!

malar

“உடைந்த வீடு” – மிகவும் பரிதாப நிலையில் பரியேறும் பெருமாள் நடிகர்!

Tamil Mint

‘சீயான் 60’ல் இணையும் விஜய் சேதுபதி? துருவ் விக்ரம் வெளியிட்ட வைரல் புகைப்படம் இதோ!

Lekha Shree

“மாஸ்டர்” விஜய்யாகவே மாறிய செல்வராகவன்… தாறுமாறு வைரலாகும் தனுஷ் அண்ணனின் லேட்டஸ்ட் வீடியோ…!

Tamil Mint

“தயவுகூர்ந்து வேறு யாரும் தவற விட வேண்டாம்” – கொரோனாவால் மனைவியை பறிகொடுத்த அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு

Shanmugapriya

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

5ஜி வழக்கு: நடிகை ஜூஹி சாவ்லா மனு தள்ளுபடி!

Lekha Shree