சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம்… முழு விவரம் இதோ..!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை வெகுவாக குறைந்ததை அடுத்து பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. மேலும், புறநகர் ரயில்களில் அரசு பணியாளர்கள் மற்றும் உரிய அனுமதி கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டுமே பயணித்து வந்தனர்.

இந்நிலையில் நாளை முதல் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.

பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் எந்த காரணத்திற்காகவும் பயணம் செய்யலாம் என்றும் ரிட்டர்ன் டிக்கெட் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 12 வயதிற்கு உள்பட்ட சிறுவர்களும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஆ.ராஜா மீது தமிழக முதல்வர் கடும் தாக்கு

புறநகர் ரயில் சேவையில் ஆண் பயணிகள் நான் பீக் நேரங்களில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு ரிட்டர்ன் டிக்கெட் கிடையாது என்றும் அறிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசு பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தனியார் அலுவலக ஊழியர்கள் அனுமதி கடிதம் மற்றும் ஐடி கார்டை காண்பித்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

ரயிலில் முன்பதிவு செய்து வருபவர்களுக்கு புறநகர் சேவைக்கான டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களுக்கு வருபவர் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் இல்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Also Read  "தமிழகத்தில் கொரோனா முழுமையாக ஒழிக்கப்படும்" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மேலும், சமூக இடைவெளியை கடைபிடித்து கூட்டம் இல்லாமல் பயணிப்பது, காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் புறநகர் ரயில் சேவையை தவிர்க்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லாக் டவுன் ரிலீஸ்: எவற்றுக்கெல்லாம் அனுமதி தெரியுமா?

Tamil Mint

சின்னப்பம்பட்டியின் சின்னத்தம்பிக்கு மாஸ் ஆன வரவேற்பு!

Tamil Mint

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

என் பிரண்டை போல யாரு மச்சான்… நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய்

Tamil Mint

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்

Tamil Mint

புதுச்சேரி ஆளுநர் ஆகிறாரா இல கணேசன்? மத்திய அமைச்சரவைக்கு போகிறாரா கிரண்பேடி?

Tamil Mint

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் கைது

Tamil Mint

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi

வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்

Tamil Mint

டெக்னாலஜிக்கு தாவிய டாஸ்மாக்: குவார்ட்டர் வாங்க கம்ப்யூட்டர் பில்

Tamil Mint

2021-ல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி!

Tamil Mint

பாலியல் புகார்: PSBB பள்ளி முதல்வர் உள்பட 5 பேருக்கு சம்மன்

sathya suganthi