திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு…!


திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவறிக்கையை சமூக நீதித்துறை, மத்திய அமைச்சரவை குழுவுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது. மேலும், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருத வேண்டும் எனவும் கூறியது.

Also Read  பாலியல் புகார்: டென்னிஸ் பயிற்சியாளர் கைது… வெளியான அதிரவைக்கும் உண்மை!

கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டின் பலன்களை மூன்றாம் பாலினத்தவர்கள் பெற வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை தயாரித்துள்ள சமூகநீதித் துறை அமைச்சகம் அதனை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.

Also Read  பவுடர் வடிவிலான கொரோனா மருந்து - இன்று முதல் விநியோகம்

சமூக நீதி துறை அமைச்சகம் வரைவு அறிக்கையை தயாரிப்பதற்கு முன், பல்வேறு அமைச்சகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய கமிஷன் அமைப்பிடம் விரிவாக ஆலோசனை நடத்தியது. அதில் யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும்.

Also Read  ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் தேவைகளை பெற ஆன்லைன் சேவைகள் அறிமுகம்!

அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பின் அமலுக்கு வரும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு கிடைக்கும் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகளும் பயன்பெறுவர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்படைப்புகள் நீக்கம்! – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.2021

sathya suganthi

மே.வங்கத்தில் அம்மா மதிய உணவுத் திட்டம்: ரூ.5-க்கு பயனடையும் ஏழைகள்

Tamil Mint

முதல் டெஸ்ட் போட்டி : 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா !!!

Tamil Mint

‘ரெட் அலர்ட்’ – வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

Lekha Shree

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

வீடு கட்ட தோண்டிய குழியில் ‘தங்கப்புதையல்’! வேடிக்கை பார்த்தவர் செய்த செயலால் பரபரப்பு!

Lekha Shree

செந்தில் பாலாஜிக்கு செக்: கொதித்தெழுந்த திமுக சீனியர்ஸ்.!

mani maran

வெங்காயம் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது…! இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல்

sathya suganthi

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது…!

Devaraj

ட்விட்டர்-க்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ள இந்தியாவின் koo app செயலி! ஏன் தெரியுமா?

Tamil Mint

பள்ளிக்கூடத்தை கூட தாண்டாமல் பலே பதவிகளை ஸ்வப்னா பெற்றது எப்படி? பகீர் தகவல்கள்

Tamil Mint