a

இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!


கொரோனா 2வது அலை தமிழகத்தில் வேகமெடுத்துள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழக அரசில் அடுத்தடுத்து அதிரடி…! புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்..!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பல்லவன் சாலையில் தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 45 வயதை கடந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் அதில் 37 சதவீதம் அதாவது 25 ஆயிரத்து 459 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் சமயமூர்த்தி கூறினார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 284 பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றும், இதில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2 ஆயிரத்து 790 பஸ்களும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 345 பஸ்களும் இயக்கப்படுவதாக அவர் கூறினார்.

Also Read  வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா...! ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்...!

நோய் தடுப்பை கட்டுப்படுத்துவதற்காக பயணிகள் நின்று கொண்டு பயணிக்க கூடாது என்பதால் அலுவலக நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தொடரும் ஆணவக்கொலை; கரூரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல்:

Tamil Mint

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

Tamil Mint

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

Tamil Mint

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

குஷ்பு கைதானதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்

Tamil Mint

மதுபாட்டிலில் கிடந்த பாம்பு; குடித்த மதுப்பிரியர் மயக்கம்

Devaraj

காதல் திருமணம் வழக்கில் அதிமுக எம்எல்ஏவுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Tamil Mint

வீடுதோறும் வாஷிங்மிஷின் வழங்க அரசிடம் எங்கு பணம் உள்ளது? – சீமான்

Devaraj

“கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!” – தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

Lekha Shree

அதெல்லாம் பண்ண முடியாது: தில்லியிடம் கறார் காட்டும் எடப்பாடி

Tamil Mint

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree