கோவை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த பழங்குடியின மாணவி..!


கோவை மாவட்டம் நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தில் மலசர் பழங்குடி வகுப்பை சேர்ந்த மாணவி சங்கவி நீட் தேர்வில் 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் குடிசை வீட்டிலிருந்த படித்து முதன்முதலாக மருத்துவ கல்லூரிக்கு செல்கிறார் மாணவி சங்கவி.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளே நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கவி. 2018ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தது முதல் அவர் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை வெளியான தேர்வு முடிவுகளில் சங்கவி 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

Also Read  கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?

இந்த கிராமத்தில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு செல்லும் முதல் மலசர் பழங்குடி மாணவி சங்கவி தான். அடிப்படை வசதிகள் இல்லாத அந்த பழங்குடி கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தது முதல் உயர் படிப்பிற்காக சாதி சான்றிதழ் வாங்க முடியாமல் தவித்துள்ளார் சங்கவி.

பின்னர் ஊடகங்களில் வெளியான செய்தியால் அவருக்கு சாதி சான்றிதழ் கிடைத்துள்ளது. இடையில் மாணவியின் தந்தை காலமாகியுள்ளார்.

Also Read  பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

ஆனால், இந்த கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ங்கவி படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுக்குறித்து கூறிய சங்கவி, “டாக்டராக வேண்டும் என்பது எனது கனவு. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் படித்து 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து இருக்கிறேன். பழங்குடி மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் .

Also Read  சசிகலா வருகையால் அச்சப்படுகிறதா எடப்பாடி அணி? 'மனித வெடிகுண்டு' சர்ச்சையால் செக் வைக்க முயற்சி!

நீட் தேர்வை பார்த்து பயப்பட கூடாது. நம்மால் முடிந்தவரை முயற்சிக்க வேண்டும். என்னை பார்த்து இன்னும் பலபேர் என் கிராமத்தில் படிக்க முன்வரவேண்டும். மருத்துவ கல்வி படிக்க அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் கலக்கும் அதிமுக விளம்பரங்கள்

Jaya Thilagan

கோவில்களில் நடக்கும் குற்றம், முறைகேடுகளை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்…!

sathya suganthi

எஸ்பிபி காலமானார்

Tamil Mint

தமிழக பாஜகவின் இன்னும் ஒரு மூத்த தலைவருக்கு கொரோனா தோற்று

Tamil Mint

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

“கோயில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும்”

Tamil Mint

மின்வெட்டும் திமுகவும்…! திருவிளையாடல் பட பாணியில் கலாய்த்த நத்தம் விஸ்வநாதன்!

sathya suganthi

கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

Tamil Mint

திருவள்ளுவரை புகழ்ந்த பிரதமர் மோடி… முதலமைச்சர் எடப்பாடியின் ட்வீட் இதோ!

Tamil Mint

சின்னப்பம்பட்டியின் சின்னத்தம்பிக்கு மாஸ் ஆன வரவேற்பு!

Tamil Mint

தினமும் 20 பரோட்டா: ஹோட்டல் வந்து சாப்பிட்டு போகும் கோயில் காளை.

mani maran

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

Tamil Mint