a

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை; பாஜக பின்னடைவு..!


மேற்கு வங்க தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் வகித்து வருகிறது. பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அங்கு திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

Also Read  பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 108 மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

Also Read  இன்று மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வு தேதி

இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காலை 9.30 மணி நிலவரப்படி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏப்ரல் 11 முதல் 14 வரை ‘தடுப்பூசி திருவிழா’ – மத்திய அரசு திட்டம்!

Lekha Shree

குடிபோதையில் முதலையுடன் பேசிக் கொண்டிருந்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Tamil Mint

வீடுவீடாக சென்று முடி திருத்தம் செய்யும் சகோதரர்கள்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழப்பு!

Lekha Shree

“வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருந்தால் மட்டும் போதுமானது” – சச்சின் டெண்டுல்கர்

Tamil Mint

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்

sathya suganthi

இந்தியாவில் புதிதாக 90,000 பேருக்கு கொரோனா

Tamil Mint

வாட்ஸ்அப் பேமென்ட் வசதிக்கு இந்திய அரசு அனுமதி

Tamil Mint

முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா தொற்று

Tamil Mint

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Tamil Mint

மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

Ramya Tamil